
ரியல்மி நிறுவனம் தனது GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதன்படி இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதே தேதியில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இதோடு வெளியீட்டு தேதி அடங்கிய டுவிட்டர் பதிவும் வெளியாகி பின் அது அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், தான் புதிய ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் பியல்மி வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பாளர்களான நவோடோ ஃபுகாசவா மற்றும் சபிக் இணைந்து இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் பணிகளை மேற்கொண்டுள்ளனர். புதிய ரியல்மி GT 2 ப்ரோ இந்திய விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் ஏப்ரல் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.
அம்சங்களை பொருத்தவரை புதிய ரியல்மி GT 2 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் 2K AMOLED LTPO 2.0 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ GPU, அதிகபட்சம் 12GB ரேம் மற்றும் 256GB மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0 கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி GT 2 ப்ரோ அம்சங்கள்:
- 6.7 இன்ச் 2K AMOLED LTPO 2.0 டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்
- அட்ரினோ GPU
- அதிகபட்சம் 12GB ரேம்
- 256GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யு.ஐ. 3.0
- 50MP பரைமரி கேமரா
- 50MP இரண்டாவது கேமரா
- 2MP கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- 5000ஸmAh பேட்டரி
- 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் சீன விலை 3699RMB இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரத்து 400 என துவங்குகிறது. அந்த வகையில் இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 45 ஆயிரத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.