இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

By Kevin Kaarki  |  First Published Mar 24, 2022, 4:28 PM IST

சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.


சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் சாம்சங் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி புதிய கேலக்ஸி M33 5ஜி அம்சங்கள் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகமான M33 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்தது. தற்போதைய தகவல்களின் படி சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலில் 6.6 இன்ச் LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ ரேட், எக்சைனோஸ் 1280 பிராசஸர், அதிகபட்சம் 8GB பேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 5000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி சாம்சங் தனது கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. எனினும், இதுபற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

சாம்சங் கேலக்ஸி M33 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

- 6.6 இன்ச் FHD+ 1080x2048 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- அதிகபட்சம் 8GB ரேம்
- 128GB மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4.1
- 50MP பிரைமரி கேமரா
- 5MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 8MP செல்ஃபி கேமரா
- 6000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

click me!