இந்தியாவில் நடைபெற்ற விர்டுஸ் குளோபல் லான்ச் - ஃபோக்ஸ்வேகன் அதிரடி

By Kevin Kaarki  |  First Published Mar 8, 2022, 3:33 PM IST

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் செடான் மாடல் குளோபல் லான்ச் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி உள்ளது.


ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய விர்டுஸ் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலின் குளோபல் லான்ச் நிகழ்வு இந்தியாவில் நடைபெற்றது. புதிய விர்டுஸ் செடான் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB AO IN பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் இரண்டாவது கார் மாடல் ஆகும். குளோபல் லான்ச்-ஐ தொடர்ந்து புதிய விர்டுஸ் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் புதிய விர்டுஸ் மாடல் மே மாத வாக்கில் வெளியிடப்படும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது. விர்டுஸ் மாடல் சக்ககன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் அளவில் 4561mm நீளமும், 1752mm அகலமும், வீல்பேஸ் 2651mm  அளவிலும் இருக்கிறது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 521 லிட்டர்கள் ஆகும். 

Tap to resize

Latest Videos

புதிய  விர்டுஸ் மாடலில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மை ஃபோக்ஸ்வேகன் கனெக்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், வெண்டிலேட் செய்யப்பட்ட இருக்கைகள், குரூயிஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இத்துடன் எல்.இ.டி ஹெட்லேம்ப்கள், அலாய் வீல்கள், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடலில் 1 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

இதன் GT லைன் மாடலில் 1.5 லிட்டர் TSI EVO என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு DSG டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆக்டிவ் சிலிண்டர் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் மைலேஜை அதிகப்படுத்தும் திறன் கொண்டது ஆகும். 

click me!