ரெட்மி பாவங்கள் - அதற்குள் நோட் 11 விலையை உயர்த்திய சியோமி!

By Kevin Kaarki  |  First Published Mar 8, 2022, 2:13 PM IST

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் அறிமுகமான ஒரே மாதத்தில் மாற்றப்பட்டு இருக்கிறது.


சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11 மற்றும் நோட் 11S ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. அறிமுகமான ஒரே மாதத்தில் ரெட்மி நோட 11 ஸ்மார்ட்போனின் இந்திய விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், ரெட்மி நோட் 11 பேஸ் வேரியண்ட் விலை மட்டும் தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ரெட்மி நோட் 11 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை மட்டும் அதிகரித்து உள்ளது. மற்ற இரு வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

Latest Videos

undefined

இந்தியாவில் ரெட்மி நோட் 11 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 13,499 என அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,999 என பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த மாடல் Mi வலைதளத்தில் காணப்படவில்லை.

பேஸ் வேரியண்ட் தவிர ரெட்மி நோட் 11 6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றே விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வேரியண்ட்களும் ஸ்பேஸ் பிளாக், ஹாரிசான் புளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் வைட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 மாடலில் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், LPDDR4X ரேம், UFS 2.2 ஸ்டோரேஜ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், IP53 தர சான்று, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 13, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

click me!