சர்வதேச மகளிர் தினம் - NFT-யில் மாஸ் காட்டும் கல்பனா சாவ்லா

By Kevin KaarkiFirst Published Mar 8, 2022, 9:45 AM IST
Highlights

இந்திய வம்சாவெளியை சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீரரான கல்பனா சாவ்லாவவின் படங்கள் NFT-யில் வெளியாகின்றன.

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்கள் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி NFT டோக்கன்களாக வெளியிடப்பட்டுள்ளன. கார்டியன்லின்க் சார்பில் NFT சந்தையில் Beyondlife.club-இல் இவை வெளியாகி உள்ளன. விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவெளி பெண் என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லா நாசாவின் கொலம்பியா விண்கலத்தில் தனது பயணத்தை முடித்துக் கொள்ளும் தருவாயில் உயிரிழந்தார்.

இவர் மட்டுமின்றி இவருடன் பயணித்த ஏழு விண்வெளி வீரர்களும் விண்கலம் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் 2003 ஆம் ஆண்டு அரங்கேறியது. இந்திய விண்வெளி வீரர்களுக்கு கல்பனா சாவ்லா முன்னோடியாக திகழ்ந்தார். 

பிரத்யேக NFT கலெக்‌ஷனில் கல்பனா சாவ்லாவின் பத்து படங்கள் இடம்பெற்றுள்ளன. பத்து படங்களும் 25 காப்பிக்கள் என மொத்தம் 250 NFT பீஸ்கள் வெளியிடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு NFT-யிலும் கல்பனா சாவ்லாவின் வாக்கியம் ஒன்று இடம்பெற்று இருக்கும். 

"கல்பனாவின் சாதனைகளுக்கு அங்கீகாரமாக, இதுவரை வெளியாகாமல் இருந்த அவரின் வாழ்க்கை படங்களை NFT வெளியீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன்," என கல்பனா சாவ்லாவின் கணவர் ஜீன்-பெரி ஹாரிசன் தெரிவித்தார். டோக்கன் செய்யப்பட்ட படங்கள் பொதுவெளியில் இதுவரை வெளியிடப்படவில்லை. 

இந்த NFT-க்களின் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை இந்திய குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட இருக்கிறது. எனினும், நிறுவனத்தின் பெயர் பற்றிய விவரங்கள் மர்மமாகவே வைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்பனா சாவ்லாவின் NFT கட்டண விவரங்களும் அறிவிக்கப்படவில்லை. 

click me!