Realme C35:பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் - ரியல்மி அதிரடி

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 07, 2022, 05:00 PM ISTUpdated : Mar 07, 2022, 08:58 PM IST
Realme C35:பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் - ரியல்மி அதிரடி

சுருக்கம்

ரியல்மி ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரியல்மி C35 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது ரியல்மி C35 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் இதே ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரியல்மி C35 மாடலில் 6.6 இனஅச் FHD+LCD ஸ்கிரீன், புதிய UNISOC T616 பிராசஸர், 4GB ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ மற்றும் VGA டெப்த் சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபிளாட் ஃபிரேம், டைனமிக் குளோயிங் டிசைன் கொண்டிருக்கும் ரியல்மி C35 மாடல் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

ரியல்மி C35 அம்சங்கள் 

- 6.6 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- 2GHz UNISOC T616 ஆக்டா கோர் 12nm பிராசஸர்
- மாலி-G57 GPU
- 4GB LPDDR4X ரேம்
- 64GB / 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி UI R எடிஷன்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- VGA B&W போர்டிரெயிட் சென்சார், f/2.8
- 8MP செல்ஃபி கேமரா, f/2.0
- 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ 
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 4ஜி வோல்ட்இ, வைபை, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5,000mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்

புதிய ரியல்மி C35 ஸ்மார்ட்போன் குளோயிங் கிரீன் மற்றும் குளோயிங் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 11,999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மார்ச் 12 ஆம் தேது மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களிலும் கிடைக்கும் என ரியல்மி தெரிவித்து உள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!