“ஐடியா “ வுடன் ஐடியா போட்டு  இணையும் “வோடபோன்” – போட்டியை சமாளிக்க  அதிரடி முடிவு ....!

 |  First Published Jan 30, 2017, 6:13 PM IST



பிரபல தொலைத்தொடர்பு  நிறுவனமான  ரிலையன்ஸ் நிறுவனத்தின்  ஜியோ, மக்களிடையே  நல்ல  வரவேற்பை  பெற்றது. ரிலையன்ஸ் ஜியோவின் எண்ணிலடங்கா  பல  சலுகைகள்  மக்களை   வெகுவாக ஈர்த்துள்ளது.

ஜியோவின் அட்டகாசமான அறிவிப்பால், பல வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துள்ளது ஜியோ .இதன் விளைவாக மற்ற தொலைதொடர்பு  நிருவனங்களும், பல  சலுகையை  அறிவித்தது.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், இந்தியாவில்  தொலைதொடர்பு நிருவனங்களுக்கிடையே  காணப்படும்  போட்டியை சமாளிக்க தற்போது,  பல  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.

வோடபோன்  நிறுவனம்:

தொலைத்தொடர்பு  நிறுவனங்களுக்கு  இடையே நடைப்பெறும்  போட்டிகளை சமாளிக்க  தற்போது,  வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் தனது தொழில்  முன்னேற்றத்திற்காக, ஐடியா நிறுவனத்துடன் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று  வருவதாக  தெரிவித்துள்ளது.

இது குறித்து  வோடபோன்  நிறுவனம்   கருத்து தெரிவித்துள்ளது. அதன்படி,  ‘ஐடியா நிறுவனத்தின் தலைமையான ஆதித்ய பிர்லா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், ஒருவேளை ஐடியா  நிறுவனத்துடன் இணைப்பை எற்படுத்திக்கொண்டால், ஐடியா நிறுவனம் வோடஃபோனுக்கு  பல புதிய பங்குகளை தர இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

வோடஃபோன் இந்தியா பிரிவு:

இதன்  விளைவாக வோடஃபோன் இந்தியா பிரிவு,  வோடஃபோனிலிருந்து பிரியும்   எனவும் தெரிவித்துள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

click me!