கேமிங் சேவையை துவங்கிய வோடபோன் ஐடியா - வெளியானது சூப்பர் தகவல்!

By Kevin Kaarki  |  First Published Mar 14, 2022, 3:48 PM IST

வி என அழைக்கப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தனது கேமிங் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது. 


வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கேமிங் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வி கேம்ஸ் என அழைக்கப்படும் புது சேவை நசாரா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து வி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. நசாரா டெக்னாலஜிஸ் இந்தியாவை சேர்ந்த கேமிங் நிறுவனம் ஆகும். புதிய கேமிங் சேவை வி வாடிக்கையாளர்களுக்கு 1200-க்கும் அதிக கேம்களை வி செயலியில் வழங்குகிறது.

வி செயலியின் கேம்ஸ் டேபில் புதிய செக்‌ஷன் இடம்பெற்று இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் HTML5 சார்ந்த மொபைல் கேம்கள் வி செயலியில் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும். வி கேம்ஸ் சேவையில் பத்து முன்னணி தலைப்புகளில் ஏராளமான கேம்கள் உள்ளன. ஆரம்பத்தில் வி கேம்ஸ் சேவையில் வழக்கமான கேமிங் தரவுகளஅ வழங்கப்பட்டு இருக்கிறது. பின் இதில் கேமிங் மற்றும் சமூக நிகழ்வுகளை ஹோஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.

Tap to resize

Latest Videos

வி கேம்ஸ்-இல் இலவச கேம்ஸ், பிளாட்டினம் கேம்ஸ் மற்றும் கோல்டு கேம்ஸ் என மூன்று பிரிவுகளில் கேம்கள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் 250 இலவச கேம்கள் உள்ளன. எனினும், இவற்றில் இன்-கேம் பர்சேஸ்கள் உள்ளன. பிளாட்டினம் பிரிவில் பே-பெர்-டவுன்லோட் அடிப்படையில் பிளாட்டினம் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ. 25 என்றும் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ. 26 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கோல்டு கேம்ஸ் பிரிவில் பயனர்களுக்கு கேம் பாஸ் வழங்கப்படுகிறது. இதில் 30 கோல்டு கேம்கள் இடம்பெற்று இருக்கும். போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு கோல்டு பாஸ் கட்டணம் ரூ. 50 என்றும் பிரீபெயிட் பயனர்களுக்கு கோல்டு பாஸ் கட்டணம் ரூ. 56 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். ரூ. 499 அல்லது அதற்கும் அதிக தொகை சலுகைகளை பெறுவோருக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்து கோல்டு கேம்கள் வழங்கப்பட இருக்கின்றன.

click me!