ரெனால்ட் க்விட் MY22 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் முற்றிலும் புதிய MY22 க்விட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரெனால்ட் க்விட் MY22 மாடலின் விலை ரூ. 4.49 லட்சம் ஆகும். இந்த மாடல் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் SCe பவர்டிரெயின் மற்றும் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷ்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட இண்டீரியர், அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ரெனால்ட் க்விட் மாடல் விற்பனையில் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிக யூனிட்களை கடந்துள்ளது. புதிய க்விட் MY22 மாடலில் மெல்லிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் வழங்கப்பட்டுள்ளன. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. இதில் தலைசிறந்த ரிவர்ஸ் கேமரா, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்மெண்ட் ORVM-கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ரெனால்ட் க்விட் MY22 மாடல் மெட்டல் மஸ்டர்ட் மற்றும் ஐஸ் கூல் வைட் மற்றும் பிளாக் ரூஃப் உடன் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டூயல் டோன் ஃபிளெக்ஸ் வீல்கள் உள்ளன. சிங்கில் டோனில் மூன்லைட் சில்வர் மற்றும் சான்ஸ்கர் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட MediaNAV எவோல்யூஷன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வீடியோ பிளேபேக் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்திய சந்தைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய க்விட் MY22 மாடல் அறிமுகமாகி இருக்கிறது. இத்துடன் ABS, EBD, சீட் பெல்ட் ரிமைண்டர், ஓவர்ஸ்பீடு அலெர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ரெனால்ட் க்விட் மாடலில் உ ள்ள 0.8 லிட்டர் என்ஜின் ஒரு லிட்டருக்கு 22.25 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. இந்த காரின் பராமரிப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 35 பைசா என கணக்கிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் ரெனால்ட் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்குகிறது. இதில் 24x7 ரோடு ரைடு அசிஸ்டன்ஸ் வசதி எவ்வித கட்டணமும் இன்றி சேர்க்கப்பட்டு இருக்கிறது. தற்போது ரெனால்ட் நிறுவனம் நாடு முழுக்க 530 விற்பனை மையங்கள், 250-க்கும் அதிக வொர்க்ஷாப் ஆன் வீல்கள் மற்றும் WOWLite லொகேஷன்களை இயக்கி வருகிறது.