டர்போ பிராசஸர் , 5ஜி கனெக்டிவிட்டி - அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமாகும் விவோ ஸ்மார்ட்போன்

By Kevin KaarkiFirst Published Jan 31, 2022, 2:54 PM IST
Highlights

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய T சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருபத்தாக அறிவித்துள்ளது. 

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் விவோ T1 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது விவோ நிறுவனத்தின் மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த பிரிவில் அதிவேகமான ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என விவோ தெரிவித்து உள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இதே ஸ்மார்ட்போனினை விவோ சீனாவில் அறிமுகம் செய்தது. டீசரில் வெளியீட்டு தேதி தவிர ஸ்மார்ட்போனின் வேறு எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. எனினும், புதிய விவோ T1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695  பிராசஸர், டர்போ கூலிங், மூன்று பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. 

Latest Videos

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடந்து அறிமுகம் செய்யப்பட்ட விவோ T1x மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

பிராசஸர் தவிர விவோ T1 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 5000mAh பேட்டரி, 44 வாட் ஃபிளாஷ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் சீன வேரியண்டில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக வெளியான தகவல்களின் படி விவோ T1 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டது.

click me!