ஜியோனி நிறுவனத்தின் புதிய ஜி13 ப்ரோ ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது.
ஜியோனி நிறுவனம் தனது ஜி13 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஜனவரி 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் தோற்றம் ஐபோன் 13 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஃபிளாட் ஃபிரேம், கேமரா மாட்யூல், செல்ஃபி கேமரா நாட்ச் உள்ளிட்டவை ஐபோன் 13 போன்றே வடிவமைக்கப்பட்டு உள்ளது.
புதிய ஜியோனி ஜி13 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹார்மனி ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இதில் யுனிசாக் T310 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4GB ரேம், 128GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் எல்டர்லி மோட் மற்றும் ஸ்மார்ட் மோட் உள்ளது. இதில் எல்டர்லி மோட் வயதானவர்கள் ஸ்மார்ட்போனினை எளிமையாக பயன்படுத்தலாம்.
மேலும் இது அவர்களுக்கான ஹெல்த் கோட்கள், பேமண்ட் கோட்களை அனுப்புகிறது. மற்றொரு ஸ்மார்ட் மோட் இளைஞர்களுக்கானது ஆகும். இதற்கான யு.ஐ. சற்றே பயனுள்ளதாகவும், ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ஜியோனி 13 ப்ரோ மாடலில் 6.26 இன்ச் FHD டிஸ்ப்ளே, யுனிசாக் T310 பிராசஸர், 4GB ரேம், 128GB மெமரி, 13MP பிரைமரி கேமரா, மேக்ரோ கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி, 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜியோனி ஜி13 ப்ரோ அம்சங்கள்
- 6.26 இன்ச் FHD டிஸ்ப்ளே
- யுனிசாக் T310 பிராசஸர்
- 4GB ரேம், 32GB மெமரி
- 4GB ரேம், 128GB மெமரி
- 13MP பிரைமரி கேமரா
- மேக்ரோ கேமரா
- 5MP செல்ஃபி கேமரா
- 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- 3500mAh பேட்டரி
- ஹார்மனி ஓ.எஸ்.
புதிய ஜியோனி ஜி13 ப்ரோ ஸ்மார்ட்போன்- ஃபர்ஸ்ட் ஸ்னோ க்ரிஸ்டல், சீ புளூ மற்றும் ஸ்டார் பார்டி பர்பில் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB+32GB விலை CNY529 இந்திய மதிப்பில் ரூ. 6,200 என்றும் 4GB+128GB விலை CNY 699 இந்திய மதிப்பில் ரூ. 8,200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.