Redmi note 11 : அடுத்த வாரம் இந்திய வெளியீடு - இணையத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 11S விலை விவரங்கள்

Nandhini Subramanian   | Asianet News
Published : Jan 31, 2022, 01:16 PM ISTUpdated : Jan 31, 2022, 01:55 PM IST
Redmi note 11 : அடுத்த வாரம் இந்திய வெளியீடு - இணையத்தில் லீக் ஆன ரெட்மி நோட் 11S விலை விவரங்கள்

சுருக்கம்

சியோமி நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களின் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

சியோமி நிறுவனம் பிப்ரவரி 9 ஆம் தேதி ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரு மாடல்களின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்தியாவில் ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ. 16,999 அல்லது ரூ. 17,499 என துவங்கும். ரெட்மி நோட் 11 மாடலின் விலை ரூ. 13,999 அல்லது ரூ. 14,499 என துவங்கும் என கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் முந்தைய ரெட்மி நோட் 10 மற்றும்  ரெட்மி நோட் 10S மாடல்களின் விலையை விட இது அதிகம் ஆகும். இரு மாடல்களின் விலையும் ரூ. 11,999 மற்றும் ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டது. 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11S மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2 MP மேக்ரோ கேமரா, 2MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம்.

ரெட்மி நோட் 11 மாடலில் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.43 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP லென்ஸ், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI13, 5000mAh பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அமேசான் பிரைம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! இனி இதையும் இலவசமாக பார்க்கலாம் - சத்தமில்லாமல் வந்த புது அப்டேட்!
Washing Machine: வாஷிங் மெஷினை சுவற்றை ஒட்டி வைப்பரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து நிச்சயம் - உஷார்!