இரு ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விவோ..!

By Kevin Kaarki  |  First Published Apr 20, 2022, 4:22 PM IST

இந்தியசந்தையில் விவோ நிறுவனம் விவோ Y33s மற்றும் விவோ Y33T என இரண்டு Y சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது.


இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு தான் வருகிறது. இதற்கு ஸ்மார்ட்போன்களும் விதிவிலக்கு அல்ல. சமீப காலங்களில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. எனினும், விவோ நிறுவனம் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனம் விவோ Y33s மற்றும் விவோ Y33T என இரண்டு Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. இரு மாடல்களில் விவோ Y33s மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் விவோ Y33T ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் அறிமுகம் செய்யப்பட்டன.

Tap to resize

Latest Videos

விலை குறைப்பு:

தற்போதைய அறிவிப்பின் படி இரு ஸ்மார்ட்போன்களின் விலையையும் விவோ நிறுவனம் இந்தியாவில் குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி விவோ Y33T ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. விவோ Y33s மாடல் விலையும் ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்த ஸ்மாரட்போன் விலை ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

புது விலை குறைப்பின் படி விவோ  Y33s மற்றும் விவோ  Y33T என இரு ஸ்மார்ட்போன்களின் விலையும் தற்போது ரூ. 17 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. விவோ நிறுவனத்தின் இரு ஸ்மார்ட்போன் மாடல்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. அந்த வகையில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டு விட்டது.

விவோ Y33S அம்சங்கள்

அம்சங்களை பொருத்தவரை விவோ Y33S மாடலில் 6.58 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 பிராசஸர், 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஸ்மார்ட்போன்ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1, 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ சென்சார், f/2.4 மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

விவோ Y33T அம்சங்கள்:

விவோ நிறுவனத்தின் Y33T மாடலில் 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அட்ரினோ 610 GPU, 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 11.1 வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, LED ஃபிளாஷ், f/1.8, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ சென்சார், f/2.4 மற்றும் 16MP செல்ஃபி கேமரா, f/1.8 வழங்கப்பட்டு உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் உள்ளன.

click me!