ரூ. 1999 விலையில் இத்தனை அம்சங்களா? அசத்தல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்..!

By Kevin Kaarki  |  First Published Apr 19, 2022, 5:15 PM IST

புதிய டிசோ வாட்ச் S மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் புளூ மற்றும் கோல்டன் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. 


ரியல்மி நிறுவனத்தின் டிசோ பிராண்டு இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக டிசோ அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச் டிசோ வாட்ச் 2 என அழைக்கப்பட்ட நிலையில், புது ஸ்மார்ட்வாட்ச் டிசோ வாட்ச் S என அழைக்கப்படுகிறது. 

புதிய டிசோ வாட்ச் S அம்சங்களை பொருத்தவரை 1.57 இன்ச் ஸ்கிரீன், 580 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5D கிளாஸ், மெல்லிய மெட்டல் ஃபிரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலில், இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங், 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் ஏராளமமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

டிசோ வாட்ச் S அம்சங்கள்:

- 1.57இன்ச் டச் டிஸ்ப்ளே, LCD ஸ்கிரீன், 
- 3-ஆக்சிஸ் அக்செல்லமீட்டர், இதய துடிப்பு சென்சார், வைப்ரேஷன் மோட்டார்
- ப்ளூடூத் 5
- 110+ அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- ஆட்டோமேடெட் ஹார்ட் ரேட் மெஷர்மெண்ட்
- SpO2 டிராக்கிங், ஸ்லீப் டிடெக்‌ஷன், ஸ்டெப்ஸ், கலோரிஸ், டிஸ்டன்ஸ், 
- ரிமிமைண்டர் அம்சங்கள்
- மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விரங்கள் 
- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி (IP68)
- 200mAh பேட்டரி, பத்து நாட்களுக்கு பேக்கப், 20 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. 

விலை விவரங்கள்:

புதிய டிசோ வாட்ச் S மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் புளூ மற்றும் கோல்டன் பின்க் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் டிசோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. விற்பனை ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்குகிறது. இதன் உண்மை  விலை ரூ. 2 ஆயிரத்து 299 ஆகும். எனினும், டிசோ பிராண்டு அறிமுக சலுகையாக புதிய டிசோ வாட்ச் S மாடலை ரூ. 1,999 விலையில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. 

click me!