ரூ. 8,499 விலையில் இத்தனை அம்சங்களா? புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ரெட்மி

By Kevin Kaarki  |  First Published Apr 20, 2022, 3:42 PM IST

சியோமி நிறுவனம் ரெட்மி 10A மற்றும் ரெட்மி 10 பவர் என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம்  செய்து இருக்கிறது.


சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்மி 10A ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது அந்த நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி 9A ஸ்மார்ட்போின் மேம்பட்ட மாடல் ஆகும். இதன் பின்புறம் கைரேகை சென்சார், EVOL டிசைன் அதிகபட்சமாக 4GB ரேம், கூடுதலாக 1GB வரை ரேம் எக்ஸ்பான்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

ரெட்மி 10A அம்சங்கள்:

- 6.53 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20:9 IPS LCD டாட் டிராப் ஸ்கிரீன்
- 2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G25 பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 3GB LPDDR4x ரேம், 32GB (eMMC 5.1) மெமரி
- 4GB LPDDR4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12.5
- 13MP பிரைமரி கேமரா, f/2.2, LED ஃபிளாஷ்
- 5MP செல்ஃபி கேமரா, f/2.2, ஃபேஸ் அன்லாக்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்)
- பின்புறம் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- மைக்ரோ யு.எஸ்.பி.
- 5000mAh பேட்டரி
- 10 வாட் சார்ஜிங்

ரெட்மி 10 பவர் அம்சங்கள்:

- 6.71 இன்ச் 1600x720 பிக்சல் HD+ 20.6:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
- அட்ரினோ 610 GPU
- 8GB LPDDR4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 13
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 2MP டெப்த் சென்சார்,  f/2.4
- 5MP செல்ஃபி கேமரா, f/2.2, ஃபேஸ் அன்லாக்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ 
- பின்புறம் கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 18 வாட் சார்ஜிங்

விலை விவரங்கள்:

ரெட்மி 10A ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக், சீ புளூ மர்றும் ஸ்லேட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3GB ரேம், 32GB மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 499 என்றும், 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி துவங்குகிறது.

ரெட்மி 10 பவர் ஸ்மார்ட்போன் பவர் பிளாக் மற்றும் ஸ்போர்ட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான், Mi வலைதளம், Mi ஹோம் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

click me!