விதவிதமாக கலர் மாறும் ஸ்மார்ட்போன்.... ‘விவோ’வின் அசத்தல் கண்டுபிடிப்பு - இந்தியாவில் அறிமுகமாகிறது

By Ganesh Perumal  |  First Published Dec 26, 2021, 10:07 PM IST

புதிய விவோ வி23 சீரிஸ் இந்தியாவின் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த வசதி விவோ வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி மாடல்களின் சன்ஷைன் கோல்டு நிற வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. 


விவோ நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை வருகிற ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி அந்நிறுவனம் வி23 5ஜி மற்றும் வி23 புரோ 5ஜி ஆகிய இரு மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாம். இதில் வி23 மாடல் பிளாட் ஸ்கிரீன் மற்றும் மெட்டல் பிரேம் கொண்டுள்ளது. அதேபோல் வி23 புரோ மாடல் வளைந்த ஸ்கிரீன் வழங்கப்பட உள்ளது.

வி23 புரோ மாடலில் இரட்டை செல்பி கேமராக்கள், மீடியாடெக் டைமென்சிட்டி 1200 பிராசஸர், 64 எம்.பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் 108 எம்.பி. பிரைமரி கேமரா இடம்பெற்றுள்ளது. புதிய வி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தோற்றத்தில் எஸ் 12 மற்றும் எஸ் 12 புரோ மாடல்களை போன்றே காட்சியளிக்கின்றன. 

Tap to resize

Latest Videos

விவோ புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள வி23 சீரிஸ் இந்தியாவின் முதல் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த வசதி விவோ வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி மாடல்களின் சன்ஷைன் கோல்டு நிற வேரியண்டில் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்தில் இருந்து பச்சை நிறத்துக்கு மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

click me!