OTT சந்தாவுடன் புது ஆஃபர்கள் - பலன்களை வாரி வழங்கிய வி..!

By Kevin Kaarki  |  First Published Mar 29, 2022, 5:03 PM IST

வி அறிவித்து இருக்கும் இரண்டு புதிய சலுகைகளை கொண்டு பயனர்கள் இந்தியன் பிரீமியர் லீக் கிரிகெட் தொடரை கண்டுகளிக்க முடியும்.


வி என்கிற வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிகெட் தொடரை முன்னிட்டு இரண்டு புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. வி இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் ரூ. 1,066 விலையில் கிடைக்கும் இரண்டு புதிய வி பிரீபெயிட் சலுகைகளிலும் வெவ்வேறு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 279 விலையில் டேட்டா ஆட் ஆன் மற்றும் ரூ. 555 விலையில் கிரிகெட் சலுகைகளை அறிவித்ததை அடுத்து வி இரண்டு புதிய சலுகைகளை இந்திய டெலிகாம் சந்தையில் அறிவித்து இருக்கிறது. ஜியோ அறிவித்த இரு சலுகைளுடனும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

வி ரூ. 499 பிரீபெயிட் சலுகை பலன்கள்:

பலன்களை பொருத்தவரை வி ரூ. 499 பிரீபெயிட் சலுகையில் தினமும் 2GB டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படவில்லை. இத்துடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் கிரிகெட் தொடர்களை நேரலையில் பார்த்து ரசிக்க முடியும்.

வி ரூ. 1066 சலுகை பலன்கள்:

வி ரூ. 1066 சலுகையிலும் முந்தைய ரூ. 499 சலுகையில் வழங்கப்படுவதை போன்றே தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். 

வி அறிவித்து இருக்கும் இரண்டு புதிய சலுகைகளை கொண்டு பயனர்கள் இந்தியன் பிரீமியர் லீக் கிரிகெட் தொடரை கண்டுகளிக்க முடியும். இதுதவிர இங்லீஷ் பிரீமியர் லீக், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மற்றும் இதர தரவுகளை ஸ்மார்ட்போனிலேயே பார்த்து ரசிக்க முடியும். 

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் இதர வி சலுகைகள்:

வி நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருக்கும் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகள் மட்டுமின்றி ரூ. 601, ரூ. 901 மற்றும் ரூ. 3.099 போன்ற பிரீபெயிட் சலுகைகளுடனும் ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கி வருகிறது. 

click me!