அசத்தல் அம்சங்களுடன் புது 5ஜி போன்கள் - சாம்சங் அதிரடி..!

By Kevin Kaarki  |  First Published Mar 29, 2022, 1:59 PM IST

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி A33 5ஜி மற்றும் A73 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. சாம்சங் கேலக்ஸி A73 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா, 120Hz சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத துவக்கத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கேலக்ஸி A73 5ஜி அம்சங்கள்

Tap to resize

Latest Videos

undefined

சாம்சங் கேலக்ஸி A73 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., ஒன் யு.ஐ. 4.1 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் உறுதி அளித்து இருக்கிறது. 

- 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர்
- அதிகபட்சம் 8GB ரேம்
- ரேம் பிளஸ் அம்சம், பில்ட்-இன் ரேம் திறனை 16GB வரை அதிகப்படுத்தும் திறன் வழங்கும்
- அதிகபட்சம் 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 108MP பிரைமரி கேமரா, OIS வசதி
- 32MP செல்ஃபி கேமரா
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

சாம்சங் கேலக்ஸி A33 5ஜி அம்சங்கள்

- 6.4 இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 1280 பிராசஸர்
- அதிகபட்சம் 8GB ரேம்
- அதிகபட்சம் 256GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 48MP பிரைமரி கேமரா, OIS வசதி
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 5MP மேக்ரோ கேமரா
- 2MP டெப்த் கேமரா
- 13MP செல்ஃபி கேமரா
- 5000mAh பேட்டரி
- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

விலை விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி A73 5ஜி ஸ்மார்ட்போன் ஆசம் கிரே, ஆசம் மிண்ட் மற்றும் ஆசம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி A33 5ஜி ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் புளூ, ஆசம் பீச் மற்றும் ஆசம் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய சாம்சங் கேலக்ஸி A73 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களை சாம்சங் இதுவரை அறிவிக்கவில்லை. 

முன்னதாக சாம்சங் கேலக்ஸி  A33 5ஜி ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அங்கு இதன் துவக்க விலை 369 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 30 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. 

click me!