Nokia C01 Plus: ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியா போன் புது வேரியண்ட் அறிமுகம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Mar 29, 2022, 10:44 AM IST
Nokia C01 Plus: ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியா போன் புது வேரியண்ட் அறிமுகம்..!

சுருக்கம்

Nokia C01 Plus: முன்னதாக நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் 2GB ரோம், 16GB மெமரி ஆப்ஷனில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போனின் 2GB ரேம், 32GB மெமரி கொண்ட புது வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒரு ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஸ்மார்ட்போன் ஆகும். 

முன்னதாக நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் 2GB ரோம், 16GB மெமரி ஆப்ஷனில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 29 ஆகும். முன்னதாக நோக்கியா C01 பிளஸ் 2GB ரேம், 16GB மெமரி மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 999-இல் இருந்து ரூ. 6 ஆயிரத்து 299 என அதிகரிக்கப்பட்டது.

நோக்கியா C01 அம்சங்கள்:

- 5.45 இன்ச் 1440x720 பிக்சல் HD+ வி நாட்ச் டிஸ்ப்ளே
-  1.6 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டா கோர் யுனிசாக் SC9863A பிராசஸர்
- IMG8322 GPU
- 2GB ரேம், 16GB (eMMC 5.1) மெமரி
- 2GB ரேம், 32GB (eMMC 5.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் 
- டூயல் சிம் ஸ்லாட் 
- 5MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் 
- 5MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 3.5mm ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ 
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
- மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் 
- 3000mAh பேட்டரி

நோக்கியா C01 பிளஸ் சலுகை விவரங்கள்:

நோக்கியா C01 பிளஸ் 2GB ரேம், 16GB மெமரி மற்றும் 2GB ரேம், 32GB மெமரி ஆப்ஷன் மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் முன்னணி சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்கள், நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. 

இந்திய சந்தையில் நோத்தியா C01 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் நோக்கியா C01 பிளஸ் ஸ்மார்ட்போனை வாங்கும் போது ரூ. 600 மதிப்பிலான சலுகை வழங்கப்படுகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!