Mercedes AMG GT : மெர்சிடிஸ் AMG GT டிராக் சீரிஸ் மாடலில் 18 இன்ச் மில்டு மற்றும் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் AMG பிராண்டு AMG-யின் 55 ஆவது ஆனிவர்சரியை கொண்டாடும் வகையில் பல்வேறு ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. எனினும், புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் AMG GT டிராக் சீரிஸ் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கிறது. AMG GT பிளாக் சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய AMG GT டிராக் சீரிஸ் ஒட்டுமொத்தமக 55 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.
மெர்சிடிஸ் AMG GT டிராக் சீரிஸ் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்:
undefined
புதிய AMG GT டிராக் சீரிஸ் மாடலில் 4 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் AMG GT பிளாக் சீரிஸ் மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், புதிய AMG GT டிராக் சீரிசில் இந்த என்ஜின் 733 ஹெச்.பி. திறன் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது AMG GT பிளாக் சீரிசை விட 3 ஹெச்.பி. பவர், 50 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும்.
சக்திவாய்ந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுக்கு மாற்றாக 6 ஸ்பீடு சீக்வென்ஷுவல் ரேஸ் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது காரின் ரியர் வீல்களுக்கு திறனை வெளிப்படுத்துகிறது. புதிய AMG GT டிராக் சீரிசில் பில்ஸ்டெயின் டேம்ப்பர்கள், மேம்பட்ட சஸ்பென்ஷன், முன்புறம் 390mm டிஸ்க், பின்புறம் 355mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் AMG GT டிராக் சீரிஸ் எக்ஸ்டீரியர்:
மெர்சிடிஸ் AMG பிராண்டு AMG GT பிளாக் சீரிசுடன் ஒப்பிடும் போது புதிய AMG GT டிராக் சீரிசின் எடையை பெருமளவு குறைத்து இருக்கிறது. இதன் காரணமாக புதிய மெர்சிடிஸ் AMG GT டிராக் சீரிஸ் எடை 1400 கிலோ ஆகும். இதன் பொனெட், சில் மற்றும் ஃபெண்டர் போன்ற பாகங்கள் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் உள்புற பாகங்களிலும் கார்பன் ஃபைபர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய AMG GT டிராக் சீரிஸ் தோற்றம் GT 3 ரேஸ் கார் போன்ற சாயலில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பொனெட் மற்றும் பம்ப்பரில் GT3 ரேஸ் காரில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ரியர் விங் பார்க்க AMG GT பிளாக் சீரிசில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது. AMG GT டிராக் சீரிஸ் மாடலில் 18 இன்ச் மில்டு மற்றும் ஃபோர்ஜ் செய்யப்பட்ட அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் AMG GT இண்டீரியர்:
புதிய மெர்சிடிஸ் AMG GT டிராக் சீரிஸ் மாடலின் உள்புறம் தற்போதைய AMG கார்களில் உள்ளதை போன்ற ஆடம்பர வசதிகள் நீக்கப்பட்டு முழுமையாக கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 5 பாயிண்ட் ஹார்னெஸ், கஸ்டமைஸ் செய்யக்கூடிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, F1 மாடல்களில் உள்ளதை போன்ற ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதன் சென்டர் கன்சோலில் லைட், பியூவல் பம்ப் மற்றும் இகனிஷன் உள்ளிட்டவைக்கு ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோலுக்கு 12 லெவல் அட்ஜஸ்ட்மெண்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் தீ அணைப்பான், எக்ஸ்டிராக்ஷன் ஹேட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மெர்சிடிஸ் AMG
மெர்சிடிஸ் AMG பிராண்டு இந்தியாவில் AMG GT, E53, A 45 S, G63 எஸ்.யு.வி. போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.