Vivo Folding Screen : விவோவின் முதல் folding ஸ்மார்ட்போன் - மாஸ் அப்டேட் கொடுத்த விவோ..!

By Kevin Kaarki  |  First Published Mar 28, 2022, 5:38 PM IST

விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளிப்புறம் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.


விவோ நிறுவனம் தனது X ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை சீன சந்தையில் ஏப்ரல் 11 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோ நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறு வீடியோவையும் விவோ நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்:

Tap to resize

Latest Videos

undefined

வெய்போவில் விவோ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி புதிய விவோ X ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் folding screen 2.0 கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளிப்புறம் வளைந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOELD பிரைமரி டிஸ்ப்ளே, 8 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

விவோ பேட்:

மேலும் புதிய விவோ X ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்கள் மற்றும் 4600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என தெரிகிறது. முன்னதாக விவோ நிறுவனம் தனது விவோ பேட் டிசைன் மற்றும் அதன் கலர் விவரங்கள் அடங்கிய டீசரை தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டது. இந்த டேப்லெட் டீப் ஸ்பேஸ் கிரே மற்றும் ஸ்கை புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

மேலும் இந்த டேப்லெட் மாடல் கீபோர்டு உடன் இணைத்துக் கொள்ளும் வசதியும், ஸ்டைலஸ் பென் இணைத்து பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படும் என தெரியவந்து இருக்கிறது. இவைதவிர விவோ நிறுவனம் விவோ X நோட் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. 

புதிய விவோ X நோட் ஸ்மார்ட்போன் 12GB ரேம், 256GB மெமரி, 512GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கிரே மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கும். விவோ X ஃபோல்டு மற்றும் விவோ X நோட் ஸ்மார்ட்போன் மாடல்களின் ஆரஞ்சு நிற வேரியண்ட் பின்னர் அறிமுகம் செய்யப்படும் என டீசரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

click me!