Triumph Tiger : சக்திவாய்ந்த என்ஜின், ஏராளமான அம்சங்கள் - புது அட்வென்ச்சர் பைக் அறிமுகம் செய்த டிரையம்ப்..!

By Kevin Kaarki  |  First Published Mar 29, 2022, 4:37 PM IST

Triumph Tiger : புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் இந்திய சந்தையின் பிரீமியம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.


டிரையம்ப் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 அட்வென்ச்சர் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 8 லட்சத்து 95ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல் டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 
டூரிங் வெர்ஷன் என்பதால் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடலின் முன்புறம் ஃபேரிங், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பெரிய விண்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடலில் TFT ஸ்கிரீன் கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஒன்றும் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 என்ஜின்:

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடலில் 660சிசி, 12 வால்வுகள் கொண்ட இன்லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 80 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிள் மாடலின் முன்புறம் ஷோவா 41mm USD செப்பரேட் பன்ஷன் கேட்ரிட்ஜ் ஃபோர்க், பின்புறம் ஷோவா மோனோ ஷாக் மற்றும் ரிமோட் ஹைட்ராலிக் பிரீலோட் அட்ஜஸ்ட்மெண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

பிரேக்கிங்:

பிரேக்கிங்கிற்கு டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடலின் முன்புறம் 310mm ரோட்டார்களும் பின்புறம் 255mm ரோட்டார்களும் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் மாடலில்  மொத்தம் ரோட் மற்றும் ரெயின் என இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை தவிர ஸ்விட்ச் செய்யக்கூடிய டிராக்‌ஷன் கண்ட்ரோல் மற்றும் டூயல் சேனல் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மாடல்- லுசெர்ன் புளு மற்றும் சஃபையர் பிளாக், கிராபைட் மற்றும் சஃபையர் பிளாக், கோரோசி ரெட் மற்றும் கிராஃபைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன. 

"இந்திய சந்தையின் பிரீமியம் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 எங்களின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும். இது டைகர் சீரிஸ் மாடல்களின் எண்ட்ரி லெவல் ரேன்ஜ் ஆகும். டைகர் ஸ்போர்ட் 660 மாடல் இந்த பிரிவில் மிகவும் சக்திவாய்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் உள்ள 3 சிலிண்டர் என்ஜின் சிறந்த செயல்திறன், ஹேண்ட்லிங், டெக்னாலஜி உள்ளிட்டவைகளை சீராக வழங்கி நீண்ட நெடிய பயணங்களை சவுகரியமானதாக மாற்றும்," என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவன வியாபார பிரிவு தலைவர் ஷோயப் ஃபரூக் தெரிவித்தார். 

click me!