வாட்டர் ஹீட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள வீனஸ் நிறுவனம் தற்போது மின் விசிறி தயாரிப்பில் இறங்கி கலக்க உள்ளது. மின்விசி என்றா பல வண்ணங்களில் புத்தம் புது பொலிவுடன் மின்விசிறிகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக , இந்த நிறுவனம் வாட்டர் ஹீட்டர் விற்பனையில் கொடிக் கட்டி பறக்றது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல தரமாகவும், மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஒரு பிரான்டட் ஆனது. இந்நிலையில் மின் விசிறி தயாரிப்பில் இறங்கியுள்ளது வீனஸ் நிறுவனம்
இது குறித்து வீனஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஐ.ராம்குமார் சில கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, வாட்டர் ஹீட்டர் விற்பனையில் 4,000 க்கும் மேற்பட்ட டீலர்கள் மற்றும் 175 சேவை மையங்களை வைத்துள்ளதாகவும், தற்போது துவங்கியுள்ள மின்விசிறி தயாரிப்பை பொறுத்தவரை 2020ம் ஆண்டுக்குள் சுமார் 5%சந்தையை கைப்பற்ற இலக்கை நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்தார் .
தற்போது இந்த நிறுவனத்திற்கு தூத்துக்குடியில் தயாரிப்பு நிறுவனம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.