தொலைதொடர்பு துறையில் கால் பதிந்தது “புதிய ஏரோவாய்ஸ் நிறுவனம்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் பல தொலைத்தொடர்பு நிருவனங்கள் மற்ற நிறுவனங்களோடு, பல புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக, மொபைல் பேமண்ட் வாலேட் அதிகளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரோவாய்ஸ் என்னும் புதிய நிறுவனம் தொடங்கப்பட இருக்கிறது. மொபைல் பேமென்ட் நிறுவனமான ஆட்பே நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஏரோவாய்ஸ் செயல்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 14-ம் தேதி முதல் சேவை
புதியதாக தொடங்கப்பட உள்ள இந்த நிறுவன சேவையானது வரும் ஏப்ரல் 14-ம் தேதி முதல் தொடங்கும் என அந்நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி சிவகுமார் குப்புசாமி தெரிவித்தார்.
5 லட்சம் வாடிக் கையாளர்களை ஈர்க்க திட்டம்
இந்த நிறுவனமானது தன்னுடைய சேவையை தொடங்க ஆரம்பித்த பின்பு , அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிடப் பட்டிருப்பதாகவும் ,இதன் மூலம் நேரடியாக 1,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
நிறுவனத்தின் செயல்பாடு எப்படி ?
இந்த நிறுவனமானது எம்விஎன்ஓ முறையில் செயல்படும் முதல் நிறுவனம் என கூறப்படுகிறது. அதாவது, சந்தையில் ஏற்கனவே உள்ள நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை வாங்கி பயன்படுத்துவதற்கு என்விஎன்ஓ என்று பெயர். இந்த அடிப்படையில் தான் இந்த நிறுவனம் செயல் பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .