பேஸ்புக் அதிரடி ...!
பிரபல சமூக வலைத்தளமான ,பேஸ்புக் நிறுவனம் ஒவ்வொரு நாலும் ஒரு புதுமையை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கான முயற்சியில் பேஸ்புக் நிறுவன உரிமையாளர் மார்க் , நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, எந்தெந்த மாற்றத்தை பேஸ்புக்கில் கொண்டு வர வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது, தற்கொலை எண்ணம் கொண்டவர்களின் மனநிலைமையை மாற்றும் பொருட்டு பல யுக்திகளை கையாள உள்ளது பேஸ்புக். இதற்கான அப்டேஷன் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்கொலையை தடுக்க வந்துவிட்டது செயற்கை நுண்ணறிவு...
undefined
இதற்கு முன்னதாக , பேஸ்புக்கில் உள்ள ,தற்கொலை தடுப்பு டூல்களை (suicide prevention tools) பேஸ்புக் போஸ்ட், லைவ்-ஸ்ட்ரீமிங் அம்சம், பேஸ்புக் லைவ் மற்றும் மெசேஞ்சர் சேவைகளில் புகுத்த இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இதனை கொண்டு ஒருவர் , எந்த மனநிலமையில் உள்ளார் என்பதையும் , ஒரு வேளை தவறான முடிவை நோக்கி அவரது எண்ணங்கள் இருக்கும் தருவாயில், முற்கூட்டியே அதனை தடுக்க பேஸ்புக், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
உதாரணம்
அமெரிக்காவின் உள்ள, ஃபுளோரிடா மாகாணத்தில் 14 வயதுடைய குழந்தை ஒன்று ஜனவரி மாதம் தற்கொலை செய்வதை பேஸ்புக் லைவ் செய்தது. இது போன்ற தவறுகள் இனி நடப்பதை தடுக்கும் பொருட்டு, பேஸ்புக் லைவ் ஸ்ட்ரீமிங்கில் ஆபாசமான தரவுகளையும், இது போன்ற விபரீதத்தையும் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவினை பேஸ்புக் தற்போது பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து தற்போது புதியதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய டூல்களை பயன்படுத்தி இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுபவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு , தடுக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் பல நன்மைகளும் இருக்கின்றன . அதே வேளையில் நம்முடைய பயன்பாட்டின் படி பல கெடுதல்களும் விளைய நேரிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.