யூ டியூப் என்றாலே அதில் இல்லாதது ஒன்றுமில்லை என்ற அளவிற்கு அனைத்து வகையான வீடியோக்களும் அதில் இருக்கும். வீடியோ பதிவில் மிகவும் பிரபலமான, டியூப் தற்போது, அமெரிக்காவில் புதிய சேனல் தொங்க திட்டமிட்டுள்ளது.
கேபிள் ஆபரேட்டர்கள்
அமெரிக்காவை பொறுத்தவரை, பெரும்பாலான தொலைக்காட்சி சேனல் சேவைகள் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யூ டியூப் புதிய சேனலை துவங்க உள்ளதால், கேபிள் ஆபரேட்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர் .
திட்டம்
undefined
மாதம் 35 டாலர் கட்டணத்திற்கு சுமார் 40 நேரலை சேனல் சேவையை வழங்க, யூ டியூப் முடிவு செய்துள்ளது. தற்போது அமெர்க்காவில் உள்ள முன்னணி சேனல்கள் அனைத்தும், யூ டியூப் சேவை மூலம் தங்கள் சேனல்களை ஒளிபரப்ப உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
குறிப்பு :
யூ டியூபில், செட்ஆப் பாக்ஸ் வசதி போலவே, நிகழ்சிகளை பதிவு செய்து பின்னர் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.