அதிரடி மறுப்பு
ஜியோ பல ஆபர்களை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், நியூ இயர் ஆபரையும் தொடர்ந்து பெற வழிவகை செய்து, மேலும் பல புதிய சலுகையை அறிவித்தது ஜியோ. இதற்கிடையில், ஜியோவை பற்றிய பல வதந்திகள் வர தொடங்கின.
அதிலும் குறிப்பாக , வாய்ஸ் கால்களுக்கு 1000 நிமிடங்களுக்கு பின் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும்,ஆனால் ஜியோ எண்களுக்கு மட்டும் தொடர்ந்து இலவசமாக வாய்ஸ் கால் பெற முடியும் என்றும் குறிப்பிட்டு, செய்திகள் வெளியானது.
மேலும், ரூ.149க்கு ரீசார்ஜ் செய்யவில்லை என்றால், ஜியோ பிரைம் திட்டம் தானாக டீஆக்டிவேட் செய்யப்படும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து பதிலளித்த ஜியோ, இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளது.
undefined
மறுப்பு தெரிவித்த ஜியோ
பெய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும், ஜியோ தொடர்ந்து வாய்ஸ் கால்கள் இலவசமாக வழங்கும் எனவும், அறிவித்தபடி சலுகையை இன்னும் ஓராண்டுக்கு பயன்படுத்திக்கொள்ள 99 ரூபாயில் ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்