Maruti Suzuki: மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ, ஸ்விப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி மாருதி சுசுகி கார் மாடல்களை வாங்குவோருக்கு தள்ளுபடி, கார்ப்பரேட் பலன்கள், எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, செலரியோ, ஸ்விப்ட், டிசையர் மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
மாருதி சுசுகி ஆல்டோ:
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் 20 ஆண்டுகளாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அந்நிறுவனத்தின் இந்திய விற்பனையில் இன்றும் குறிப்பிடத்தக்க யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. இதில் 796சிசி என்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆல்டோ மமாடல் பெட்ரோல் மற்றும் CNG ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு ரூ. 31 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை மாருதி சுசுகி ஆல்டோ CNG வேரியண்டிற்கு பொருந்தாது.
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ:
எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 31 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் எஸ் பிரெஸ்ஸோ CNG வேரியண்ட்களுக்கு பொருந்தாது. இந்திய சந்தையில் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடல் 1 லிட்டர் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மாருதி சுசுகி ஸ்விப்ட்:
மூன்றாம் தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடல் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜினுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. ஸ்விப்ட் மாடலை வாங்குவோருக்கு ரூ. 17 ஆயிரத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 27 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி டிசையர்:
ஸ்விப்ட் மாடலை போன்றே 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும் டிசையர் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிசையர் மாடலுக்கும் அதிகபட்சமாக ரூ. 27 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி இகோ:
மாருதி சுசுகி இகோ மாடல் 73 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. இகோ 5 மற்றும் 7 சீட்டர் வெர்ஷன்கள், கார்கோ வேன் வேரியண்ட்களை வாங்குவோருக்கு ரூ. 29 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா:
முற்றிலும் புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு இந்த மாதம் ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி செலரியோ மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 26 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.