புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் சிங்கில் மற்றும் டூயல் டோன் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏராளமான காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கிரெட்டா iMT மற்றும் கிரெட்டா நைட் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இதுவரை கிரெட்டா மாடல் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு DCT, 6 ஸ்பீடு AT, 6 ஸ்பீடு iVT என நான்கு விதமான டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கிரெட்டா 6 ஸ்பீடு iMT மற்றும் நைட் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது.
விற்பனை நிறுத்தம்:
இதேபோன்று ஹூண்டாய் கிரெட்டா 1.4 லிட்டர் டர்போ DCT SX மற்றும் 1.5 லிட்டர் டீசல் AT SX வேரியண்ட்களின் விற்பனை நிறுத்தப்பட்டன. ஹூண்டாய் கிரெட்டா iMT ஆப்ஷன் மிட்-ஸ்பெக் S வேரியண்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 12 லட்சத்து 68 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நைட் எடிஷன்:
ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதாவது 1.5 லிட்டர் பெட்ரோல் MT S+ நைட், 1.5 பெட்ரோல் iVT SX(O) நைட், 1.5 லிட்டர் டீசல் MT S+ நைட் மற்றும் 1.5 லிட்டர் டீசல் AT SX(O) நைட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 13 லட்சத்து 35 ஆயிரம், ரூ. 17 லட்சத்து 06 ஆயிரம், ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மற்றும் ரூ. 18 லட்சத்து 02 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல் S iMT மாடலில் மேனுவல் குயிஸ், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கப்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எல்.இ.டி. இண்டிகேட்டர்கள், ORVM-கள், குரூயிஸ் கண்ட்ரோல், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், கூல்டு கிளவ்பாக்ஸ், சன்கிளாஸ் ஹோஸல்டர், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் என ஏராளமான அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள என்ஜின் 113 பி.ஹெச்.பி. திறன், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
கிரெட்டா நைட் எடிஷன் அப்டேட்ஸ்:
புதிய ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிஷன் மாடல் சிங்கில் மற்றும் டூயல் டோன் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் ஏராளமான காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் கிளாஸ் பிளாக் கிரில், ரெட் இன்சர்ட்கள், பிளாக்டு அவுட் அலாய் வீல்கள், ரெட் முன்புற பிரேக் கேலிப்பர்கள், முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட், சைடு சில்ஸ், சி பில்லர், ORVM மற்றும் ரூஃப் ரெயில்களில் கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இதன் பூட் லிட் மீது நைட் எடிஷன் பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது.
கிரெட்டா நைட் எடிஷன் கேபின் ஆல் பிளாக் தீம் செய்யப்பட்டு சீட் மற்றும் ஸ்டீரிங் வீல்களில் கலர்டு ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. நைட் எடிஷன் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்களில் கிடைக்கிறது. கிரெட்டா நைட் எடிஷன் மாடல் 6 ஸ்பீடு MT, 7 ஸ்பீடு iVT மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.