Tata Curvv EV: இந்த காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கர்வ் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஒரு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கூப் மாடல் ஆகும். புதிய டாடா எலெக்ட்ரிக் கார் நெக்சான் EV மாடலுக்கு மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. புதிய டாடா கர்வ் எலெக்ட்ரிக் மிட் சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும்.
புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலின் பெயர் இதுவரை முடிவு செய்யப்படவில்லை. மேலும் இந்த மாடல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தோற்றத்தில் டாடா கர்வ் கான்செப்ட் மாடல் டாடாவின் புதிய டிஜிட்டல் டிசைனில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிசைன்:
முன்புறம் டாடா கர்வ் கன்செப்ட் மாடல் மினிமலிஸ்ட் தோற்றம், ஃபுல் லென்த் எல்.இ.டி. லைட் பார், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ரியர் பம்ப்பர், முக்கோண வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் ஹவுசிங் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் ஸ்லோபிங் ரூஃப்லைன், உறுதியான ஷோல்டர் லைன், ஸ்கொயர்டு-ஆஃப் வீல் ஆர்ச்கள் உள்ளன. பின்புறம் ஃபுல் விட்த் லைட் பார் டெயில் லைட், ஆங்குலர் பம்ப்பர் மற்றும் முக்கோன ஏர் வெண்ட்கள் உள்ளன.
புதிய கர்வ் கான்செப்ட் டாடா நிறுவனத்தின் ஜெனரேஷன் 2 எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்ச்சரை பயன்படுத்த இருக்கிறது. இது வெவ்வேறு பாடி ஸ்டைல் மற்றும் பவர்டிரெயின் ஆப்ஷன்களை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நெக்சான் EV மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஜென் 1 ஆர்கிடெக்ச்சரை போன்றே ஜென் 2 ஆர்கிடெக்ச்சரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எனினும், புதிய ஜென் 2 ஆர்கிடெக்ச்சர் பெரிய பேட்டரி மற்றும் வித்தியாசமான பவர்டிரெயினை பொருத்துவதற்கு ஏற்ற வகையில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கர்வ் பிளாட்ஃபார்ம் கொண்டு டூயல் மோட்டார் செட்டப் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியை வழங்க முடியும்.
முழுமையான எலெக்ட்ரிக் வாகனம்:
டாடா மோட்டார்ஸர் நிறுவனம் கர்வ் பிளாட்பார்ம் கொண்டு ஹைப்ரிட் மாடல்களை வெளியிட திட்டமிடவில்லை. மாற்றாக முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகவே கர்வ் பிளாட்பார்ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் முழுமையான எலெக்ட்ரிக் வாகனமாக உருவாக்கி அத்துடன் ICE என்ஜின் பொருத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 500 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.
இண்டீரியர்:
கர்வ் கான்செப்ட் மாடலின் உள்புறம் மிக எளிமையான டிசைன், மூன்றடுக்கு டேஷ்போர்டு, ஃபேப்ரிக் மெட்டீரியல் ஃபினிஷ், எல்.இ.டி. ஸ்ட்ரிப், கீழ் பகுதியில் ஆங்குலர் செக்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் இரட்டை டிஜிட்டல் ஸ்கிரீன், இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீரிங் வீல் டிசைன் காணப்படுகிறது. கேபினில் பானரோமிக் சன்ரூஃப், கிளைமேட் கண்ட்ரோல் ஸ்விட்ச்கள் உள்ளிட்டவை காணப்படுகின்றன.