போலி கணக்குகள் எதிரொலி! Twitter Blue Tick சந்தா தற்காலிமாக நிறுத்தம்?

Published : Nov 12, 2022, 12:35 PM IST
போலி கணக்குகள் எதிரொலி! Twitter Blue Tick சந்தா தற்காலிமாக நிறுத்தம்?

சுருக்கம்

டுவிட்டரில் கட்டண அடிப்படையில் அனைவருக்கும் ப்ளூ டிக் வழங்கப்படும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எலான் மஸ்க் டுவிட்டரைக் கைப்பற்றியதும் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரம் வழங்கப்படும் என்றார். மேலும், பெரும்நிறுவனங்கள், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள், அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக், அனைவருக்கும் வழங்கப்படும் என்றார். இதற்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்து, உடனே அமல்படுத்தினார். இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதனிடையே எலான் மஸ்க், இயேசு கிறிஸ்து பெயரிலேயே போலி கணக்குகள் தொடங்கப்பட்டு ப்ளூ டிக்குகள் பெறப்பட்டன. இவ்வாறு பல போலி கணக்குகள் பிரபலங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தொடங்கப்பட்டு ப்ளூ டிக் குறியீடை பெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, Eli Lilly & Co. என்ற பிரபல தடுப்பூசி நிறுவனத்தின் பெயரில், போலி கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டு, ப்ளூ டிக் குறியீடும் பெற்றது. மேலும், தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுவதாக ட்வீட் செய்தது. இந்த விவகாரம் உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தற்போது, கட்டண அடிப்படையில் ப்ளூ டிக் குறியீடு வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக பயனர்கள் டுவிட்டர் செயலியில், ப்ளூ டிக் குறியீடுக்கு விண்ணப்பிக்கும் போது, ஸ்கிரீனில் ஒரு அறிவிப்பு வருகிறது. அதில், ‘இதற்கு நீங்கள் ஆர்வம் காட்டிமைக்கு நன்றி. Twitter Blue ஆனது விரைவில் உங்கள் நாட்டில் வரும். பின்னர் முயற்சிக்கவும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் கைவசம் போனதும், பல்வேறு நடவடிக்கைளும், முடிவுகளும் அவசர அவசரமாக எடுக்கப்பட்டன. மேலும், எலான் மஸ்க் அறிவித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பணியாளர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டன. அந்த வகையில், ப்ளூ டிக் சந்தாவானது அவசர கதியில் உருவாக்கப்பட்டது. 

டுவிட்டருக்குப் போட்டியாக முன்னேறி வரும் Koo செயலி! புதிய வசதிகள் அறிமுகம்!!

இதனால் முறையான சரிபார்ப்பு இன்றி, கட்டணம் செலுத்தும் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது. இந்தச் சூழலானது போலி கணக்குகளை உருவாக்குவோருக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் விளைவாக போலிக்கணக்குகளும் தற்போது ப்ளூ டிக் பெற்றுள்ளது. இதன்பிறகு இந்த குழப்பங்கள் எப்படி சரிசெய்யப்படும், எலான் மஸ்க்கின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!