ஏர்டெலில் புதிதாக 3ஜிபி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய பிளான் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிளானின் விலை ரூ.199 ஆகும்.
கடந்தாண்டு ஏர்டெல் நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான்களின் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏர்டெல்லைத் தொடர்ந்து ஜியோ உட்பட மற்ற நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. தற்போது 5ஜி வந்துவிட்டதால், 5ஜிக்கான ரீசார்ஜ் திட்டம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவரையில் அதிகாரப்பூர்வமாக 5ஜி பிளான் விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலையில், 4ஜி சேவையில் புதிதாக மலிவு விலையில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, அதாவது கடந்தாண்டு விலையேற்றத்திற்கு முன்பு இருந்த 199 பிளானை, கூடுதல் டேட்டா மற்றும் வேலிடிட்டியுடன் மீண்டும் அறிவித்துள்ளது.
undefined
அதன்படி, 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 3 ஜிபி மொத்த டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்தவுடன, ஒரு MB டேட்டாவுக்கு 50 பைசா வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில் அன்லிமிடெட் லோக்கல் கால், STD, ரோமிங் கால் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
மேலும், 300 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 100 இலவச எஸ்எம்எஸ் பயன்படுத்த முடியும். அதன்பிறகு அனுப்பப்படும் ஒவ்வொரு SMSக்கும் 1 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். STD SMS ஆக இருந்தால் 1.5 ரூபாய் வசூலிக்கப்படும். அத்துடன் Wynk இசைக்கான இலவச சந்தா வழங்கப்படகிறது. பயனர்கள் இலவசமாக Hellotunes அமைக்கலாம்.
TRAI அறிக்கை எதிரொலி: Jio 4G ரீசார்ஜ் பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு?
ஏர்டெல் 5ஜி:
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை படிப்படியாக தொடங்கியுள்ளது. இந்தியாவில் ஏர்டெல் 5ஜி வாடிக்கையாளர்கள் 1 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அண்மையில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த சேவை தற்போது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசியில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
5G ஸ்மார்ட்போன்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் மேற்கண்ட பகுதிகளில் Airtel 5G சேவையை அனுபவிக்கலாம். அவர்கள் தங்கள் சிம் கார்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. 4ஜி ஏர்டெல் சிம் கார்டிலேயே, 5ஜி சேவை வழங்கப்படுவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. மேலும், எந்தெந்த ஸ்மார்ட்போனில் ஏர்டெல் 5ஜி கிடைக்கும் என்ற பட்டியல் ஏர்டெல் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.