சமூக வலைத்தங்களில், எல்லா தரப்பினராலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஸ் ஃபேஸ்புக். கொரோனா காலத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக அதிகரித்தது.
2021-ஆம் ஆண்டில் கொரோனாவால் மக்கள் முடங்கியிருந்த வேளையில், மிகவும் பிரபலமாகவும் மக்களுக்கு உபயோகமாகவும் இருந்த ஆப்ஸ்கள் (செயலிகள்) என்னென்ன?
ஆன்லைன் வர்த்தகத்தில் கிங்காக இருக்கும் அமேசான் ஆப்ஸ், கொரோனா காலத்தில் மக்களுக்குக் கைகொடுக்கவும் தவறவில்லை. சிறிய குண்டூசி தொடங்கி விலை உயர்ந்த பொருட்கள் வரை எல்லா பொருட்களும் அமேசான் ஆப்ஸில் கிடைத்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில், மளிகை பொருட்கள் முதல் மொபைல் போன்கள், லேப்டாப்கள் வரை வீட்டிலேயே டெலிவரி செய்து அசத்தியது அமேசான்.
undefined
இந்தியாவில் கொரோனா தொற்று தொடங்கிய வேளையில், கொரோனா பற்றிய தகவல், நாம் வசிக்கும் இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் கொரோனா தொற்றுப் பகுதி இருக்கிறது, எவ்வளவுப் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா அறிகுறிகள் உள்ளவனவா என்பதையெல்லாம் ஆரோக்ய ஆப்ஸ் வழங்கியது. கொரோனா தடுப்பூசி பற்றிய தகவல்களையும் இந்த ஆப் வழங்கியது. தேவையற்ற இடங்களில் மக்கள் செல்வதை இந்த ஆப் தவிர்க்க உதவியது.
ஊரடங்குக் காலத்தில் எல்லாருமே வீட்டிலேயே இருந்தபடி வேலை செய்ய, அவர்களின் உணவு தேவைகளை சொமேடோ பூர்த்தி செய்தது. கொரோனா காலத்தில் வெளி இடங்களில் உணவு சாப்பிட வேண்டிய சூழல் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு அம்சங்களோடு உணவுகளை வழங்கியதில் சொமேடோவின் பங்கு அதிகம். அதற்காக பாதுகாப்பு நடைமுறைகளையும் சொமேடோ செய்திருந்தது.
கொரோனா காலத்தில் மாணவர்களின் படிப்பை தொடர் பேருதவியாக இருந்தது கூகுள் கிளாஸ் ரூம். இது பள்ளி மாணவர்கள் படிக்க கருவியாக உதவியது. கொரோனா காலத்திலும் கூகுள் கிளாஸ்ரூம் ஆசிரியர்-மாணவர் இடையே பாலமாக விளங்கியது.
கொரோனா தொடங்கிய உடனே ஆன்லைன் மீட்டிங்குகள், வகுப்புகள் பிரபலமாயின. இதற்கு ஷூம் ஆப் உதவியது. தனிப்பட்ட வீடியோ உரையாடல், ஆன்லைன் வகுப்புகள், அலுவலக மீட்டிங்குகள், உடற்பயிற்சி வகுப்புகள், பிறந்த நாள் / திருமண நாள் கொண்டாட்டங்கள் எனப் பல தேவைகளை நிறைவேற்ற ஷூம் ஆப் உதவியது.
வீட்டையே விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில், சினிமா ரசிகர்களுக்கும், சினிமா துரையைச் சேர்ந்தவர்களுக்கும் பக்கபலமாக இருந்தது OTT தளங்கள்.இது மக்களின் பொழுபோக்கு மையமாக மாறியது. திரைப்படங்கள், சீரியல்கள், வெப் சீரிஸ்கள் என இந்த தளத்தில் தொடர்ந்து வெளியானது. இதில் நெட்ஃபிளிக்ஸ் இந்த ஆண்டு அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டது.
சமூக வலைத்தங்களில், எல்லா தரப்பினராலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்ஸ் ஃபேஸ்புக். கொரோனா காலத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஊரடங்கு காரணமாக அதிகரித்தது.
வீடியோ பொழுதுபோக்குத் தளத்தில் முன்னணியில் வகிப்பதில் நெட்ஃபிளிக்ஸ் போலவே, ஆடியோ செயலியாக, ஸ்பாட்டிஃபையும் இந்த ஆண்டு இசை ரசிகர்களை ஈர்த்தது.
ஊரடங்கால், பேருந்து மற்றும் ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உபெர் ஆப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய உதவியாக இருந்தது.
வேலை தேடுபவர்களுக்கும் வேலை வழங்குபவர்களுக்கு பாலமாக இருக்கும் லிங்டுஇன் ஆப், கொரோனா காலத்திலும் இளைஞர்களுக்குப் பக்கபலமாக இருந்தது.