ஏர்டெல் நிறுவனம் அண்மையில், கட்டணங்களை உயர்த்திய போதும் தற்போது பயனர்களை கவரும் விதமாக அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளது.
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வி ஆகியவை இம்மாத அண்மையில் தங்களது பிரீபெய்டு பிளான்களின் விலைகளை அடுத்தடுத்து உயர்த்தின. இதனால் பயனர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். கட்டணங்களை உயர்த்திய போதும் தொடர்ந்து பயனர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை ஜியோ நிறுவனம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு போட்டியாக தற்போது ஏர்டெல் நிறுவனமும் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரூ. 359 மற்றும் ரூ. 599 விலையில் கிடைக்கும் ஏர்டெல் பிரீபெயிட் பிளான்களுக்கு ரூ. 50 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக இந்தச் சலுகை ஏர்டெல் தேங்ஸ் செயலி பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு பேக்குகளும் தற்போது ரூ. 309 மற்றும் ரூ.549 விலையில் கிடைக்கிறது.
இதில் ரூ.309 பேக்கில் தினசரி 2 ஜி.பி. டேட்டா இலவசம், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இது 28 நாட்கள் வேலிடிட்டு கொண்டதாகும். அதேபோல் ரூ.549 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது.