முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ (JIO), தற்போது புத்தாண்டு பரிசாக மேலும் ஒரு சலுகையை வழங்கி உள்ளது.
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ (JIO), அண்மையில் தனது அனைத்து பேக்குகளின் கட்டணங்களையும் உயர்த்தியது. இந்த விலை உயர்வு டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது.
கட்டணங்களை உயர்த்திய போதும் தொடர்ந்து ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். அண்மையில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் வழங்கிடாத ஒரு சலுகையை ஜியோ வழங்கி இருந்தது. அதன்படி 1 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உடன் டேட்டா பேக் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
undefined
இந்நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக மேலும் ஒரு சலுகையை ஜியோ நிறுவனம் வழங்கி உள்ளது. அதன்படி ரூ. 2545 பிரீபெயிடு பேக்கின் வேலிடிட்டி மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக ஜியோவின் ரூ. 2545 பேக்கின் வேலிடிட்டி 336 நாட்களாக இருந்து வந்தது. தற்போது இந்த பேக்கின் வேலிடிட்டி மேலும் 29 நாட்களுக்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரூ. 2545 பேக்கின் சலுகை தற்போது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜியோ சேவையை பயன்படுத்துவோரும், புதிதாக ஜியோ நெட்வொர்க்கில் இணைவோரும் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகையின் மூலம் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.