எளிய வழிமுறைகளை கையாண்டாலே, எலெக்ட்ரிக் வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்த முடியும். இவற்றை மேற்கொள்ள அதிக செலவும் ஆகாது.
எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தும் அனைவரும் தங்களது வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்தவே விரும்புவர். எலெக்ட்ரிக் வாகனம் பழையதாகும் போது, செயல்திறன் அடிவாங்குவதை கவனிக்க முடியும். இவ்வாறான சூழ்நிலையின் போது அதிக செலவில் அப்கிரேடு செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
எனினும், விலை உயர்ந்த அக்சஸரீக்களை அப்கிரேடு செய்வது, விலை உயர்ந்த உபகரணங்களை வாங்குவது மட்டுமே தீர்வு கிடையாது. சில எளிய வழிமுறைகளை கையாண்டாலே, எலெக்ட்ரிக் வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்த முடியும். இவற்றை மேற்கொள்ள அதிக செலவும் ஆகாது. எலெக்ட்ரிக் வாகனத்தின் செயல்திறனை மேம்படுத்த என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
undefined
வழக்கமான கார் பராமரிப்பு:
எலெக்ட்ரிக் வாகனத்திற்கும், வழக்கமான வாகனத்திற்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை அவற்றை சீரான இடைவெளியில் பராமரிப்பது தான் எனலாம். ஒவ்வொரு 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோமீட்டர்களில் எலெக்ட்ரிக் வாகன டையர்களை மாற்ற வேண்டும். வீல் அலைன்மண்ட்களையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். எலெக்ட்ரிக் காருக்கு வைப்பர் ஃபுளூயிட் ஸ்விட்ச் டிரீட் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எலெக்ட்ரிக் வாகனத்தின் ஆயுள் நீடிக்கும்.
பேட்டரி பயன்பாடு:
எலெக்ட்ரிக் வாகனத்திற்கான இதயமே பேட்டரி தான். காரின் பேட்டரி ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான், எலெக்ட்ரிக் வாகனத்தின் செயல்திறன் சீராக இருக்கும். வழக்கமான பராமரிப்புகளுடன், பேட்டரியை சரியாக பயன்படுத்த வேண்டும். குளிர்ந்த பகுதிகளில் உள்ளவர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை மறைக்கப்பட்ட இடங்களில் பார்க் செய்ய வேண்டும். ஃபாஸ்ட் சார்ஜிங்-ஐ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. பேட்டரியை எப்போது 20 முதல் 80 சதவீத அளவுகளில் வைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்க வேண்டும்.
கூலண்ட் சிஸ்டம்:
பேட்டரியின் வெப்பத்தை சமமாக வைப்பதில், கூலண்ட் சிஸ்டம் தான் பொறுப்பேற்றுக் கொள்கிறது. எலெக்ட்ரிக் வாகனத்தின் கூலண்ட் சிஸ்டத்தை ஆண்டி-ஃபிரீஸ் மற்றும் ஃபிளஷ் செய்யும் போது, எலெக்ட்ரிக் வாகனத்தின் செயல்திறன் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படும் கூலண்ட் வகை வேறுப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பிரீ கண்டிஷன்:
அதிக வெப்பம் கொண்ட சூழ்நிலைகளில் காரை சார்ஜ் செய்யும் போது, காரில் ஏ.சி. ஆன் செய்ய வேண்டும். கேபின் டெம்ப்பரேச்சரை முன்கூட்டியே பிரீ-கண்டிஷன் செய்யும் போது காரின் ரேன்ஜ் அதிகரிப்பதோடு, செயல்திறனும் அதிகரிக்கும். எலெக்ட்ரிக் வாகனம் ஓட்டும் போது அதிவேகமாக பயணிப்பதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாக செல்லும் போது பேட்டரி விரைவில் தீர்ந்து போகும். நாளடைவில் பேட்டரி ஆயுள் குறைய தொடங்கி விடும்.