Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

By Dinesh TG  |  First Published Oct 25, 2022, 5:34 PM IST

நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துபவராக இருந்தால் முதலில் இந்த செட்டிங்ஸை லாக் செய்யுங்கள். இல்லையென்றால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..
 


தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் தொழில்நுட்பம் மிக அதிக வளர்ச்சியை பெற்று விட்டது. அதற்கு ஏற்ப திருடர்களும் ஸ்மார்ட்டாக செயல்பட தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக, தற்போது பேஸ்புக்கில் போலி கணக்கு மூலம் பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்கள்  உங்கள் அக்கவுண்டை போல போலியாக ஒரு அக்கவுண்டை கிரியேட் செய்து உங்கள் நண்பர்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். 

ஹேக்கர்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்டில் நீங்கள் வைத்துள்ள  உங்கள் ப்ரொபைல் போட்டோ, நீங்கள் போஸ்ட் செய்த புகைப்படங்கள், போன்ற உங்கள் அக்கவுண்டின் மொத்த விவரத்தையும் திருடி விடுகிறார்கள். பின் உங்கள் சுயவிவரங்களை உள்ளிட்டு நீங்கள் உருவாக்குவதைப் போல புதிய அக்கவுண்டை உருவாக்குகிறார்கள். பின் உங்கள் நண்பர்களுக்கு ப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கிறார்கள்.  பிறகு நீங்கள் பேசுவது போல உங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் செய்து பணத்தை ஏமாற்றி விடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Latest Videos

undefined

Fun பண்ணலாம் வாங்க.. அட்டகாசமான கூகுள் விளையாட்டு!

இதனைத் தடுப்பதற்கு நீங்கள் எந்த விதமான ஆப்பையும் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை இதை செய்தால் போதும். உங்கள் மொபைலின் பேஸ்புக் பக்கத்தில் உள்ள உங்கள் ப்ரோபைலை க்ளிக் செய்யுங்கள். பிறகு  அதிலுள்ள பகுதியில் உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யுங்கள் அதில் லாக் ப்ரொபைல் என்ற ஆப்ஷனை ஆன் செய்யுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் திருடப்படுவதை தடுக்கலாம். மேலும் உங்களுக்கு பழக்கம் இல்லாதவர்களால் உங்கள் ப்ரொபைலை  பார்க்க முடியாது. இதன் மூலம் உங்கள் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். அதனால் தாமதம் இல்லாமல் உடனடியாக இந்த செட்டிங்ஸை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் ஆன் செய்து கொள்ளுங்கள்.

click me!