தம்ஸ்-அப் எமோஜி அனுப்பியவருக்கு ரூ.60 லட்சம் அபராதம்!

By Manikanda Prabu  |  First Published Jul 11, 2023, 11:19 AM IST

செல்போனில் தம்ஸ்-அப் எமோஜி அனுப்பியவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


ஆன்லைன் தளங்களில் எமோஜிக்களின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. தகவல்தொடர்புகளில் உணர்ச்சிகளை வெளிகாட்ட ஆன்லைன் உரையாடல்களின்போது, பல்வேறு தருணங்களில் எமோஜிக்களே அனுப்பப்படுகின்றன. உரையைத் தட்டச்சு செய்யாமல் சொற்களைச் சுருக்கமாகப் பயன்படுத்த எமோஜிக்கள் உதவுகின்றன. எமோஜிக்களை அனுப்புவதற்கு யாரும் பெரிதாக யோசிப்பதில்லை. இத்தகைய எமோஜிக்களை அனுப்பி ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மகிழ்ச்சிகரமாக அனுப்பப்படும் இந்த எமோஜிக்களே ஒருவருக்கு பிரச்சினையாக அமைந்துள்ளது. சாதாரணமான தம்ஸ் அப் எமோஜி அனுப்பியதற்காக கனடா விவசாயி ஒருவருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

கனடாவின் சஸ்காட்செவானை சேர்ந்தவர் கிறிஸ் ஆக்டர். விவசாயத் தொழில் செய்து வரும் இவர், பொருட்களை அளிக்கும் ஒப்பந்தம் தொடர்பாக தம்ஸ் அப் எமோஜியை அனுப்பியதால் அவருக்கு சுமார் 50,88,893 கனடிய டாலர்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  தங்கள் நிறுவனம் 12.73 அமெரிக்க டாலர் என்ற விலையில் 86 டன் ஆளி விதைகளை வாங்க உள்ளதாக, சவுத் வெஸ்ட் டெர்மினலில் வசித்து வரும் தானியங்களை மொத்தமாக வாங்கி விற்கும் தொழில் செய்து வரும் கெண்ட் மைக்கேல்போரோ என்பவர் தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விவசாயியான கிறிஸ் ஆக்டரை தொடர்பு கொண்ட கெண்ட் மைக்கேல்போரோ, நவம்பர் மாதத்தில் தனக்கு ஆளி விதைகளை வழங்க வேண்டும் என்பதைக் கூறும் ஒப்பந்தத்தை புகைப்படமாக போனில் அனுப்பியிருந்தார்.  அதே மெசேஜில், அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்யும்படியும் கெண்ட் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், விவசாயியான கிறிஸ் ஆக்டர் தம்ஸ் அப் எமோஜியை அனுப்பியிருந்தார்.

WhatsApp tip: வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன்! தவறாக அனுப்பிய மெசேஜை ஈசியாக திருத்துவது எப்படி?

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் விவசாயி கிறிஸ் ஆக்டரால், ஆளி விதைகளை கெண்ட் மைக்கேல்போரோவுக்கு அனுப்ப முடியவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தத்துக்கு தம்ஸ் அப் போட்டதாக கெண்ட் மைக்கேல்போரோ தனது தரப்பு நியாயத்தை கூறியுள்ளார். ஆனால், அது ஒப்பந்தந்தை ஒப்புக் கொண்டதற்கான கையெழுத்து அல்ல என்று விவசாயி கிறிஸ் ஆக்டர் தெரிவித்துள்ளார். மேலும், ஒப்பந்தம் தனக்கு வந்துவிட்டது என்பதை தெரிவிக்கும் நோக்கிலேயே அந்த எமோஜியை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் நீதிமன்றம் சென்றுள்ளனர். இந்த விசித்திரமான வழக்கை எதிர்கொண்ட நீதிமன்றம், கெண்ட் மைக்கேல்போரோவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், நவீன காலத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ள நீதிமன்றம், ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஒப்பந்ததை மீறியதாக விவசாயி கிறிஸ் ஆக்டருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து Dictionary.com-இல் தம்ஸ் அப் எமோஜியின் அர்தத்தை நீதிபதி தேடியுள்ளார். அதில், ஒருவரின் கருத்தை அங்கீகரிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், அனுமதியளிக்கவும்,  ஆதரவளிக்கவும் இந்த எமோஜியை மெசேஜில் பயன்படுத்துகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது அதிகாரப்பூர்வமாக இல்லை என்றாலும், அதனை தனது தீர்ப்புக்கு வலு சேர்க்கும் வகையில் பயன்படுத்தியதாக நீதிபதி கீன் தெரிவித்துள்ளார்.

“ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த கையொப்பம் ஒரு பாரம்பரிய முறையாகும், அதே நேரத்தில் எமோஜிகள் போன்ற நவீன முறைகளும் அதன் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.  தம்ஸ் ப் எமோஜி, வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், கையொப்பத்தின் இரண்டு முதன்மை செயல்பாடுகளை அது நிறைவேற்றுகிறது. அதன்படி, இந்த வழக்கில் ஒன்று கையொப்பமிட்டவரை அடையாளம் காணுதல்; மற்றொன்று ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது ஆகியவற்றை தம்ஸ் அப் எமோஜி குறிக்கிறது. இந்த வழக்கில், கையெழுத்திட்டவர் அவரது செல்போன் எண் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்படி, விவசாயி கிறிஸ் ஆக்டர் தனது செல்போனில் இருந்து அனுப்பிய தம்ஸ் அப் எமோஜி ஒப்பந்தத்தின் கையொப்ப தேவையை பூர்த்தி செய்துள்ளது.” எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

click me!