ஐபிஎம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இது முதல் முறை அல்ல. ஜனவரி 2023 இல் அதன் வருவாய் அழைப்பின்போது, 3,900 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
ஐ.பி.எம். நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஜொனாதன் அடாஷேக் உடனான ஏழு நிமிட சந்திப்பில் அந்த நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு நிமிட சந்திப்பின் போது ஊழியர்களிடம் பேசிய அடாஷேக், நிறுவனம் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. இதனால் பணியாளர்கள் குறைக்கப்பட உள்ளனர் என்று கூறியதாகத் தெரிகிறது.
ஆனால் இந்தப் பணிநீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை.
செயற்கை நுண்ணிறவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் வணிகச் சூழலுக்கு ஏற்ப ஊழியர்களைப் பயிற்றுவிப்பதில் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஆச்சரியமாக அமைந்துள்ளது.
பூமியை ஊடுருவிச் சென்ற 7 வினோதப் பொருட்கள்! அடுத்து என்ன நடக்கப்போகுது? விஞ்ஞானி விளக்கம்
டிசம்பர் 2023 இல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அரவிந்த் கிருஷ்ணா, ஐந்து ஆண்டுகளில் 30% அலுவலக செயல்பாடுகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறைக்கு மாற்றப்படலாம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது இது முதல் முறை அல்ல. ஜனவரி 2023 இல் அதன் வருவாய் அழைப்பின்போது, 3,900 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.
2024ஆம் ஆண்டில் தொழில்நுட்பத் துறை மூன்று மாதங்களுக்குள் பல பணிநீக்கங்களைக் கண்டுள்ளது. 204 நிறுவனங்களில் தோராயமாக 50,000 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்து வருகின்றன.
பணிநீக்கங்கள் இருந்தபோதும், IBM மிதமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. நிறுவனத்தின் நான்காவது காலாண்டு வருவாய் முந்தைய ஆண்டை விட 4% அதிகரித்துள்ளது. இருப்பினும், AI தொழில்நுட்ப முதலீட்டில் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
Lexus LM 350h: டொயோட்டா வெல்ஃபயர் ஸ்டைலில் லெக்ஸஸ் நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. கார்!