ரூ. 8 ஆயிரம் பட்ஜெட்டில் 6GB ரேம் ஸ்மார்ட்போன் - மாஸ் அப்டேட் கொடுத்த டெக்னோ!

By Kevin Kaarki  |  First Published Feb 12, 2022, 3:38 PM IST

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 


டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6GB ரேம் கொண்டிருக்கும் என்றும் இது ஸ்பார்க் சீரிசில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை டெக்னோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மர்மமாகவே உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் ஃபிளாக்‌ஷிப் தர அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் இதன் விலை ரூ. 8 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என டெக்னோ தெரிவித்து இருக்கிறது. புதிய டெக்னோ சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்திலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதில் 6GB ரேம் வழங்கப்படுவதை தவிர வேறு எந்த அம்சங்களும் அறிவிக்கப்படவில்லை.

Tap to resize

Latest Videos

சில தினங்களுக்கு முன் தான் டெக்னோ நிறுவனம் இந்தியாவில் போவா 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 900 சிப்செட் கொண்டிருக்கிறது. இதில் 8GB ரேம், 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கடந்த மாதம் மட்டும் டெக்னோ பாப் 5 LTE, டெக்னோ பாப் 5 ப்ரோ மற்றும் டெக்னோ போவா நியோ போன்ற மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

டெக்னோ பாப் 5 LTE மற்றும் டெக்னோ பாப் 5 ப்ரோ மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓ.எஸ். கொண்டிருக்கின்றன. இவற்றில் 6.52 இன்ச் HD+LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. டெக்னோ  பாப் 5 LTE மாடலில் 5000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

டெக்னோ போவா நியோ மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர், 6.8 இன்ச் HD+ டாட் நாட்ச்  டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.  டெக்னோ பாப் 5 ப்ரோ மற்றும் டெக்னோ போவா நியோ மாடல்களில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

click me!