ரிஃபெர் செய்தால் ரூ. 900 கேஷ்பேக் - அதிரடி ஆஃபரை அறிவித்த அமேசான் பிரைம்

By Kevin Kaarki  |  First Published Feb 12, 2022, 3:09 PM IST

அமேசான் பிரைம் யூத் ஆஃபரில் பயனர்களுக்கு அசத்தலான கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


அமேசான் நிறுவனம் சமீபத்தில் பிரைம் ரெஃபரல்ஸ் திட்டத்தை 18 முதல் 24 வயதுள்ள பயனர்களுக்கு அறிவித்தது. இதை கொண்டு பிரைம் சந்தாவில் 50 சதவீதம் தள்ளுபடி பெற முடியும்.  ஏற்கனவே யூத் ஆஃபரில் சேர்ந்திருப்பவர்கள் தங்களின் 18 முதல் 24 வயதுள்ள நண்பர்களுக்கு பிரைம் ரெஃபர்களை அமேசான் ஆப் மூலம் அனுப்ப வேண்டும்.

பின் உங்களின் நண்பர் பிரைம் சந்தாவில் இணைந்து தனது வயதை உறுதிப்படுத்திக் கொண்டால் உங்களுக்கு 15 நாட்களுக்கான பிரைம் சந்தா இலவசமாக வழங்கப்படும். இத்துடன் உங்கள் நண்பர் தேர்வு செய்யும் திட்டத்திற்கு ஏற்ப 60 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். அதிக நண்பர்களை ரிஃபெர் செய்வதன் மூலம் உங்களுக்கான இலவச சந்தா நாட்களில் எந்த மாற்றமும் இன்றி கூடுதலாக வழங்கப்பட்டு கொண்டே இருக்கும்.

Tap to resize

Latest Videos

உங்களது நண்பர் தேர்வு செய்யும் பிரைம் திட்டத்திற்கு ஏற்ப கேஷ்பேக் தொகை வேறுப்பட்டு கொண்டே இருக்கும். அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான திட்டத்தில் ரூ. 900 வரை கேஷ்பேக் பெற முடியும். 

கேஷ்பேக் தொகை விவரங்கள்

மாதாந்திர திட்டம் ரூ. 179 - யூத் ஆஃபரின் கீழ் ரூ. 90 கேஷ்பேக் மற்றும் ரெஃபரல் ரிவார்டின் கீழ் ரூ. 18 கேஷ்பேக் 

மாதாந்திர திட்டம் ரூ. 459 - யூத் ஆஃபரின் கீழ் ரூ. 230 கேஷ்பேக் மற்றும் ரெஃபரல் ரிவார்டின் கீழ் ரூ. 46 கேஷ்பேக் 

வருடாந்திர திட்டம் ரூ. 1499 - யூத் ஆஃபரின் கீழ் ரூ. 750 கேஷ்பேக் மற்றும் ரெஃபரல் ரிவார்டின் கீழ் ரூ. 150 கேஷ்பேக் 

click me!