Noise நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை ரூ. 1999 விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
Noise நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் கிராண்ட் என அழைக்கப்படுகிறது. இதில் 1.69 இன்ச் LCD டிஸ்ப்ளே, SpO2 சென்சார், IP67 தர சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
Noise கலர்ஃபிட் பல்ஸ் கிராண்ட் அம்சங்கள்
- 1.69 இன்ச் கலர் டிஸ்ப்ளே, LCD பேனல்
- 150 வாட்ச் ஃபேஸ்கள்
- 60 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
- IP67 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
- 24/7 இதய துடிப்பு மாணிட்டர்
- ஸ்டிரெஸ் டிராக்கர், ஸ்லீப் டிராக்கர்
- 15 நிமிட சார்ஜிங்கில் 25 மணி நேரத்திற்கான பிளேபேக்
- ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். கனெக்டிவிட்டி
புதிய Noise கலர்ஃபிட் பல்ஸ் கிராண்ட் அறிமுக சலுகையாக ரூ. 1,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 3999 என மாறிவிடும். இந்த ஸ்மார்ட்வாட்ச் எலெக்ட்ரிக் புளூ, ஆலிவ் கிரீன், ஷேம்பெயின் கிரே மற்றும் ஜெட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை பிப்ரவரி 18 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அமேசான் இந்தியா வலைதளத்தில் துவங்குகிறது.