49 ஆயிரம் ரூபாய்க்கு நோக்கியா போன் அறிமுகம்! அப்படி என்ன இருக்கு இதுல?

By Asianet TamilFirst Published Feb 15, 2023, 8:21 PM IST
Highlights

49 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்னாப்டிராகன் 695 பிராசசருடன் நோக்கியா X30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு ரூபாய்க்கு அப்படி என்ன அம்சங்கள் உள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்.

நோக்கியா பெயர் என்றாலே தனி மவுசு தான். நோக்கியா நிறுவனத்தை HMD நிறுவனம் கைப்பற்றினாலும், நோக்கியா பெயரை வைத்துக்கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது நோக்கிய X30 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனில் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய அலுமினியம், 65% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரிலா கிளாஸ் DX+ இருப்பதால் 98 சதவீதம் வரையில் அசல் திரை வெளிச்சத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறது.  8GB RAM, ஸ்னாப்டிராகன் 695 SoC பிராசசரும் ஸ்மார்ட்போனின் திறனை மேம்படுத்துகிறது. 3 OS அப்டேட், 3 வருட செக்யூரிட்டி அப்டேட் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேமராவைப் பொறுத்தவரையில் OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP பின்புற கேமரா, 13MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. இரவிலும் லேசாக தெரியும் வகையில் டார்க் விஷன். நைட் செல்ஃபி அம்சங்களைக் கொண்டுள்ளது, 

நோக்கியா X30 5G சிறப்பம்சங்கள்:

  • திரை: 6.43-இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) FHD+ அமோலெட் டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரெஷ் ரேட், 
  • பிராசசர்: ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசசர், 8GB LPDDR4x ரேம், 256GB (UFS 2.2) மெமரி
  • சிம் வகை: இரட்டை சிம் (நானோ + நானோ)
  • ஆண்ட்ராய்டு பதிப்பு: ஆண்ட்ராய்டு 12
  • கேமரா அம்சங்கள்:  50MP பின்புற கேமரா, OIS தொழில்நுட்பம், LED ஃபிளாஷ், 13MP அல்ட்ரா-வைட் கேமரா, 16MP செல்பி கேமரா

சென்சார்: இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

கூடுதல் அம்சங்கள்: தண்ணீரிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் அம்சம் (IP67), அதிகமான 5G பேண்டுகள். அதாவது SA/NSA (n1, n3, n5, n7, n8, n28, n38, n40, n41, n77, n78 பட்டைகள்), டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz, 5GHz.1 ப்ளூ டூ GPS/5), GLONASS/ Beidou, NFC, யுஎஸ்பி டைப்-சி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4200mAh பேட்டரி, QC3.0, PD3.0, PPS வசதி

OnePlus பிரியர்களுக்கு சிறிய ஏமாற்றம்!

விற்பனை தேதி:

நோக்கியா X30 5G ஸ்மார்ட்போனானது இரண்டு நிறங்களில் வருகிறது. அவை ஐஸ் ஒயிட் மற்றும் கிளவுடி ப்ளூ ஆகும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் இது விற்பனைக் வருகிறது, இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.  Nokia.com , Amazon.in, சில வெளிக்கடைகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை பெறுவதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 

click me!