5,000mAh பேட்டரி கொண்ட Moto G04 மொபைலில் ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் எல்லாமே உள்ளன. ரூ.6,999 தொடக்க விலையில் கிடைக்கிறது.
மோட்டோரோலா தனது Moto G04 இன் விற்பனையை இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்கு வருகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் போட்டிகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் கவர்ச்சிகரமான வசதிகளுடன் குறைவான விலையிலும் இந்த மொபைல் உருவாகியுள்ளது.
Moto G04 அதன் 4GB + 64GB மாடலுக்கு ரூ.6,999 தொடக்க விலையில் கிடைக்கிறது. 8GB + 128GB மாடல் ரூ.7,999 விலையில் விற்பனைக்கு உள்ளது. பகல் 12 மணிக்கு பிரத்தியேகமாக பிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் வழியாக இந்த மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் இந்த மொபைல் போனின் அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக 750 ரூபாய் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. இந்த மொபைல் பல வண்ணங்களில் கிடைக்கிறது. நீலம், பச்சை, கருப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் Moto G04 மொபைலை வாங்கலாம்.
ஐபோன் தொலைந்து போனால் அது உங்க பொறுப்பு: உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு
பட்ஜெட் பிரிவைச் சேர்ந்த இந்த ஸ்மாட்போன் 6.56-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டது. இந்த டச் ஸ்கிரீன் HD+ ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. UNISOC T606 பிராசெஸர், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் MyUX இன்டர்ஃபேஸ் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது.
பெரிய 5,000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 15W வேகமான சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. பின்புறம் 16 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. முன்புறம் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது. மொபைல் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. ஃபேஸ் ஐடி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டோரேஜை விரிவுபடுத்த மெமரிகார்டு ஸ்லாட், யூஎஸ்பி டிடைப்-சி (USB-Type C) போர்ட், 3.5mm இயர்ஃபோன், சிறந்த ஆடியோ அனுபவத்துக்கு Dolby Atmos, புளூடூத் என ஸ்மார்ட்போன்களில் இருக்கவேண்டிய முக்கிய அம்சங்கள் எல்லாமே உள்ளன.
ஆணுறையில் அரசியல் கட்சிகளின் சின்னம்! ஆந்திராவில் வெற லெவலில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்!