ஆணுறையில் அரசியல் கட்சிகளின் சின்னம்! ஆந்திராவில் வெற லெவலில் நடக்கும் தேர்தல் பிரச்சாரம்!

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆகிய இரு கட்சிகளின் சின்னங்களுடன் ஆணுறை பாக்கெட்டுகளை கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதாகக் கூறப்படுகிறது.

Condoms branded with party symbols new political campaign tool in Andhra Pradesh sgb

அரசியலில் ஆணுறைகள் என்ன பங்கு வகிக்கின்றன? ஆந்திரப் பிரதேச அரசியல் களத்தில் ஆணுறைகளுக்கு முக்கியப் பங்கு இருப்பது போலத் தெரிகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் ஆணுறைகள் பிரச்சாரக் கருவியாக மாறியுள்ளன. இரு முக்கிய கட்சிகளும் தங்கள் கட்சி சின்னங்கள் அச்சிடப்பட்ட பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளன.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னணி எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆகிய இரு கட்சிகளின் சின்னங்களுடன் ஆணுறை பாக்கெட்டுகள் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அரசின் திட்டங்களின் பயனாளிகளின் எண்ணிக்கையை எப்படிக் குறைப்பது என்று ஒருவர் விவாதிப்பதை வீடியோ காட்டுகிறது.

கோயில்கள் மீது 10% வரி விதிப்பு: கர்நாடக காங். அரசின் இந்து விரோதக் கொள்கை என பாஜக கண்டனம்

மக்களவைத் தேர்தலுக்காக வீடு வீடாக பிரசாரம் செய்துவரும் கட்சி தலைவர்களும் ஆணுறை பாக்கெட்டுகளை விநியோகம் செய்கிறார்களாம். இருவரும் ஒரே வேலையைச் செய்யதாலும், இரு தரப்பினரும் கட்சியின் சின்னத்துடன் ஆணுறைகளை விநியோகிப்பதற்காக ஒருவரையொருவர் திட்டிக்கொள்கின்றனர். 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ட்விட்டர் பதிவில், தெலுங்கு தேசம் கட்சி எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்று சாடியுள்ளது. "இது ஆணுறையுடன் நிறுத்தப்படுமா அல்லது பொதுமக்களுக்கு வயாகரா விநியோகிக்கத் தொடங்குமா?" என்று ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐபோன் தொலைந்து போனால் அது உங்க பொறுப்பு: உச்ச நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios