Tata Nexon Coupe: டாடா நெக்சான் கூப் மாடல் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் எஸ்.யு.வி. கூப் வேரியண்டை உருவாக்கி வருவதாக இந்த ஆண்டு துவக்கத்திலேயே தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த கூப் மாடல் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. முந்தைய தகவல்களின் படி டாடா நெக்சான் கூப் மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும், இதன் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெக்சான் கூப் மாடல்:
புதிய நெக்சான் கூப் மாடல் தற்போதைய டாடா நெக்சான் போன்றே X1 பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த மாடலின் நீளம் சற்று அதிகமாக இருக்கும் என்றும், இதன் மூலம் புதிய கூப் மாடலில் ரியர் ஒவர்ஹேங் பெரியதாக இருக்கும். இந்த காரின் வீல்பேஸ் 50mm வரை நீளமாக இருக்கும். டிசைனை பொருத்த வரை நெக்சான் கூப் மாடலின் முன்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த காரின் பக்கவாட்டு பகுதியில் பின்புற கதவுகளின் நீளம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் பின்புற இருக்கைகளில் அதிக இடவசதி இருக்கும். இதேபோன்று பூட் ஸ்பேஸ் சற்று அதிகமாகவே எதிர்பார்க்கலாம். முதற்கட்டமாக டாடா நெக்சான் கூப் மாடல் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட்டு அதன்பின் பெட்ரோல் என்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.
டாடா நெக்சான் கூப் மாடலிலும் நெக்சான் EV லாங் ரேன்ஜ் மாடலில் வழங்கப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படலாம். அந்த வகையில் நெக்சான் கூப் மாடலில் 40 கிலோ வாட் ஹவர் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 129 ஹெச்.பி. பவர் மற்றும் 245 நியூட்டன் மீட்டர் செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் அதிகபட்சமாக 160 ஹெச்.பி. பவர் வழங்கும் திறன் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
டீசல் என்ஜின்:
புதிய நெக்சான் கூப் மாடலில் தற்போதைய நெக்சான் டீசல் வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 ஸ்டேஜ் 2 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த என்ஜின் சற்றே அதிக செயல்திறன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.