240 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் எலெக்ட்ரிக் ஹீரோ ஸ்பிலெண்டர்..!

By Kevin Kaarki  |  First Published Mar 25, 2022, 9:59 AM IST

ஆட்டோமோடிவ் வடிவமைப்பாளரான வினய் ராஜ் சோமசேகர் ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். 


பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்துவோர் மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர். இந்த நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற துவங்கி இருக்கும் காலக்கட்டம் என்பதால், இன்றும் பெட்ரோல் திறன் கொண்ட வாகனங்களே சாலைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

எடுத்தவுடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது அனைவருக்கும் எளிதான காரியமாக இருந்து விடாது. ஆக்டிவா, ஸ்பிலெண்டர் என இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகி வரும் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களும் அறிமுகம் செய்யப்படலாம். இவை எடுத்தவுடன் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக உருவெடுக்கவில்லை. இரு மாடல்களும் சந்தையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பல ஆண்டுகள் தேவைப்பட்டன. 

Latest Videos

undefined

இந்த பிராண்டுகள் பெட்ரோல் மாடல்களை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் தங்களது வாகனங்கள் நல்ல விற்பனையை பதிவு செய்ய வேண்டும் என்றே விரும்பும். 

ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக்

 ஆட்டோமோடிவ் வடிவமைப்பாளரான வினய் ராஜ் சோமசேகர் ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை உருவாக்கி இருக்கிறார். "இந்திய சந்தையில் அதிக பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடலாக ஹீரோ ஸ்பிலெண்டர் இருக்கிறது. இதன் தோற்றம் இன்றும் தனித்துவம் மிக்கதாக இளமையாகவே காட்சி அளிக்கிறது. இந்த மாடலின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது." என சோமசேகர் தெரிவித்தார். 

"ஸ்பிலெண்டர் பைக் மேஜி நூடுல்ஸ் போன்றது. நாளைக்கே மேகியுடன் 10 சதவீதம் கூடுதல் பூண்டு சேர்க்கப்பட்டால், வாடிக்கையாளர் அதனை எளிதில் கண்டு பிடித்து விடுவர். பெரும்பாலும் புது வெர்ஷனை பலரும் விரும்ப மாட்டாகர்கள். ஸ்பிலெண்டர் மாடலும் இதே போன்றது தான். அதில் அதிக மாற்றங்களை புகுத்த முடியாது. 2004 ஆம் ஆண்டு ஸ்பிலெண்டர் மாடலில் க்ளியர் லென்ஸ் மல்டி-ரிஃப்லெக்டர் ஹாலோஜன்கள் வழங்கப்பட்டன, 2010 ஆம் ஆண்டு செல்ஃப் ஸ்டார்ட் வசதி, 2020-இல் சீட் நீளம் சற்று அதிகப்படுத்தப்பட்டது. இவ்வளவு தான். எனினும், எதிர்காலத்தில் இதுவும் நடக்க வேண்டும். ஸ்பிலெண்டர் எலெகெட்ரிக் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட வேண்டும். ஆனால் எப்படி?"

இந்த எண்ணம் தான் ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் ரெண்டரை உருவாக்க தூணுடு கோளாக இருந்தது. பெட்ரோல் திறன் கொண்ட ஸ்பிலெண்டர் மாடலில் அதிகளவு மாற்றங்களை செய்யக் கூடாது என்பதில் வினய் மிகவும் கவனமாக இருந்தார். ஸ்பிலெண்டர் மாடலில் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் அசெம்ப்ளிக்கு பதிலாக பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை சுற்றி பிளாக்டு-அவுட் கேசிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்பிலெண்டர் மாடலின் ஹெடலேம்ப் கேசிங், அலாய் ரிம்கள், செண்ட்ரல் பேனல்கள் மற்றும் ரியர் ஃபெண்டர் உள்ளிட்டவைகளில் புளூ அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன் பாரம்பரியம் மிக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்கிராப் ரெயிலுக்கு மாற்றாக HF டீலக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு உள்ள ஒற்றை பீஸ் பிளாஸ்டிக் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிராண்டிங் இ ஸ்பிலெண்டர் என மாற்றப்பட்டு இருக்கிறது.

ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் அம்சங்கள்:

ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் மாடலில் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 9 கிலோவாட் மவுண்ட் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 2 கிலோவாட் ஹவர் பேட்டரியை வைத்துக் கொள்வதற்கான இடவசதியும் உள்ளது. கூடுதல் பேட்டரி சிங்கில் சார்ஜ் ரேன்ஜ்-ஐ 50 சதவீதம் வரை அதிகப்படுத்துகிறது.

வழக்கமான 4கிலோ வாட் ஹவர் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் வரை செல்லும். கூடுதலாக 6 கிலோ வாட் ஹவர் பேட்டரி இதன் ரேன்ஜை 180 கிலோமீட்டர்களாக அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு மாறுதல்களுடன் ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் வேரியண்ட் நான்கு வேரியண்ட்களில் உருவாக்க முடியும். இதில் டாப் எண்ட் வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்வது பற்றி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எனினும், ஸ்பிலெண்டர் மாடலை எலெக்ட்ரிக் பைக் போன்று மாடிஃபை செய்ய பல்வேறு வழிமுறைகள் சந்தையில் கிடைக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தானேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலுக்கான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்-ஐ வெளியிட்டது. இந்த எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஆர்.டி.ஒ. அனுமதி பெற்ற ஒன்று ஆகும். 

click me!