"OLA"வில் களமிறங்கும் டாடா நானோ கார்... ஆனால் எலெக்ட்ரிக் கார்...! முந்துங்கள்..

 |  First Published Nov 24, 2017, 5:09 PM IST
tata nano electric car going to launch in next week



"OLA"வில் களமிறங்கும் டாடா நானோ கார்... ஆனால் எலெக்ட்ரிக் கார்...!

அனைவரையும் கவர்ந்த நானோ கார் தற்போது மீண்டும் புது பொலிவுடன் எலெக்ட்ரிக் காராக  அடுத்த வாரம் முதல் சந்தைக்கு வர உள்ளது

Latest Videos

undefined

வரும் 28 ஆம் தேதி சந்தைக்கு வர உள்ள நானோ எலெக்ட்ரிக் கார், கோவையில் தயாராகி  வருகிறது. அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கோவையில் உள்ள ஜெயன்ஆட்டோமோட்டிவ்ஸ் உடன் இணைந்து இதனை தயார் செய்து வருகிறது.

நானோவின் பாடி மட்டும் டாடா நிறுவனத்திடமிருந்து பெற்று, மற்ற வேலைகள் எல்லாம்  கோவையில் ஜெயன் நிறுவனம் செய்து வருகிறது.

சிறப்பம்சங்கள்

48-volt electric system/ 23hp of power 

800கிலோ எடையை கொண்டதாக இந்த கார் இருக்கும்

4 பேர் பயணிக்க கூடியதாக இருக்கும்

ஏர் கண்டிஷனர் உண்டு...

விலை

நானோ காரின் விலை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

ஓலாவுடன் இணையும் நானோ எலக்ட்ரிக் கார்

டெல்லியில் அதிக அளவில் காற்று மாசு அடைந்து உள்ளதால்,அதனை தவிர்க்கும் பொருட்டு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அதற்கான அனைத்து முயற்சியும் எடுக்கப்பட்டுவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து புதியதாக வெளிவரவுள்ள 400 நானோ எலக்ட்ரிக் கார் ஓலாவுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை முதலில் டெல்லியில் நடைமுறைக்கு வர உள்ளது.   

 உலகிலேயே மிக குறைந்த விலையில் கிடைக்ககூடிய எலக்ட்ரிக் கார் நானோ கார் தான் என்பது   குறிப்பிடத்தக்கது  

click me!