ரூ. 20 க்கு ஒரு ஜி.பி டேட்டா - செக்க போடு போடும் வை பை டப்பா...!

 |  First Published Nov 22, 2017, 9:24 PM IST
Initially this service was introduced in Karnataka State Bangalore.



குறைந்த கட்­ட­ணத்­தில், தொலை தொடர்பு சேவை­களை வழங்கி வரும், ரிலை­யன்ஸ் ஜியோ­வுக்கு போட்டி போடும் வகையில் அதி­ர­டி­ ஆஃபரை இறக்கியுள்ளது பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னம்.

‘வை பை டப்பா’ எனும் நிறுவனத்தை சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகி­யோ­ர் துவங்கியுள்ளனர்.  இந்­நி­று­வ­னம், 2, 10 மற்­றும் 20 ரூபா­யில், அதி­வேக இன்­டர்­நெட் சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது. 

Tap to resize

Latest Videos

முதற்­கட்­ட­மாக இந்த சேவையை கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரில் அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.  அதாவது ரூ. 2 க்கு 100 எம்.பி. ரூ. 10 க்கு 500 எம்.பி. ரூ. 20 க்கு 1 ஜி.பி. வீதம் டேட்டா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இவற்றை ஒரு நாள் மட்டுமே வேலிடிட்டி. 

தேநீர் விடுதி மற்­றும் பல­த­ரப்­பட்ட கடை­களில், ‘வை பை டப்பா’ டோக்­கன் விற்­கப்­படும் எனவும் இதை வாங்கி மொபைல் எண்ணை பதிவு செய்து ஓ.டி.பி. நெம்பரை பதிவுசெய்து டேட்டாவை பெற­லாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெங்­க­ளூரு முழு­வ­தும், 350 வழித்­த­டங்­களில், ‘வை பை டப்பா’ பயன்­பாட்­டிற்­கான, ஒருங்­கி­ணைப்பு வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளதாகவும் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். 

click me!