tata motors new ev car: டாடாவின் புதிய எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்: அம்சங்கள் என்ன? எகிறும் எதிர்பார்ப்பு

By Pothy Raj  |  First Published Apr 28, 2022, 5:08 PM IST

tata motors new ev car : டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை தனது புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வாகனச் சந்தை உலகில் இல்லை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை தனது புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வாகனச் சந்தை உலகில் இல்லை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இ்ந்தியாவில் அடுத்தும்வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் கார்களுக்கு தனிசந்தை உருவாகும் என்பதை டாடா மோட்டா்ஸ் நிறுவனம் தெரிந்துகொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 10 எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

நாளை அறிமுகமாகும் டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் கார் நெக்ஸான்(ஈவி) எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஸனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. அதிகமான பேட்டரி பேக்அப், திறன் உடையதாக இருக்கலாம். அல்லது அல்ட்ராஸ் எலெக்ட்ராக் காரா அல்லது முற்றிலும் புதிய காராக இருக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

ஆனால் தகவல் அறிந்த வட்டாரங்கள், சில ஊடகங்கள் கூறுகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை நெக்ஸான் EV காராக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. 40கிலோவாட்ஸ் பேட்டரி பேக்அப், 400 கி.மீ வரை செல்லக்கூடிய திறன் போன்றவை கொண்டதாக இருக்கும். தற்போது இருக்கும் நெக்ஸான்ஈவி மாடல் காரில் 30கிலோவாட்ஸ் அளவுக்குதான் பேட்டரி திறன் இருக்கிறது. இதைவிட 30சதவீதம் அதிகாக புதிய காரில் இருக்கலாம்

ஏற்கெனவே இருக்கும் நெக்ஸான் எலெக்ட்ரிக் ஏஆர்ஏஐ பரிசோதனையில் 312 கி.மீ.வரை மைலேஜ் கிடைத்தது. ஆனால் நெக்ஸான் ஈவி காரில் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தாலே 188 முதல் 220 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் வகையில் இருக்கும். 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நாளை வெளியிடும் எலெக்ட்ரானிக் லாங் ரேஞ்ச் வெர்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இருக்கும் அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஈவி ஆகியவற்றைவிட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

நீண்டதொலைவு செல்லக்கூடிய மாடல் காராக இருந்தால், பேட்டரி பேக்அப் அதிகமாக இருக்கவேண்டும், மோட்டார் திறன் சக்தியானதாக இருக்க வேண்டும். ஆதலால் இரு அம்சங்களை நிறைவேற்றும்வகையில் புதிய கார் இருக்கவேண்டும்
ஆனால், ஆல்ட்ராஸ் ஈவி ரக காராக இருந்தால், நாட்டிலேயே இதுதான் சிறிய ரக ஈவி காராக இருக்கும். டாடாவின் டிகோர் ஈவி காரைவிட சற்று அதிகமாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் நெக்ஸான் ஈவி எஸ்வியு ரக காரையும் டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. இந்த காரின் பேட்டரி பேக்அப் சிங்கில் சார்ஜ் மூலம் 450கி.மீ வரை செல்ல முடியும். ஆதலால் நெக்ஸான் ஈவிஎஸ்யுவியாக இருக்கலாமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது

click me!